மூலிகை சீயக்காய் பவுடருக்கு தேவையான பொருட்கள்

Advertisement

Herbal hair wash powder ingredients in tamil

பெண்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதை விட தலைமுடி மீது அதிக கவனம் செலுத்துவார்கள். தலைமுடியில் என்ன கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் தலைமுடி ஆனது உதிர ஆரம்பிக்கும். ஷாம்புகள் மட்டுமில்லை எண்ணெய்களையும் வாங்கி பயன்படுத்துவார்கள்.

இதனால் தலைமுடி உதிர்வது மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்திலும் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான முறையில் சீயக்காய் பயன்படுத்துவது நல்லது. அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் மூலிகை சீயக்காய் பவுடருக்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

மூலிகை பவுடர் தயாரிக்க தேவையான பொருட்கள்:

 Best herbal hair wash powder ingredients in tamil

  1. வெந்தயம் – 100 கிராம்
  2. பச்சை பயறு – 1.5 கிலோ
  3. பருப்பு/கடலை பருப்பு-1/2 கிலோ
  4. காய்ந்த அஜ்வைன் இலைகள் – கைப்பிடி
  5. காய்ந்த வேப்பிலை – கைப்பிடி
  6. உளுந்து பருப்பு/கருப்பு உளுந்து-1/2 கிலோ
  7. காய்ந்த கறிவேப்பிலை – 200 கிராம்
  8. கருஞ்சீரகம் -100 கிராம்
  9. ஆளி விதை – 100 கிராம்
  10. உலர்ந்த செம்பருத்திப் பூக்கள் – 250 கிராம்
  11. ஆவாரம் பூ – 250 கிராம்
  12. உலர்ந்த ரோஜா இதழ்கள் – 250 கிராம்
  13. வெட்டிவேர்- ஒரு கையளவு
  14. உலர்ந்த அம்லா – 200 கிராம்

செய்முறை:

  • மேலே உள்ள பொருட்கள் அனைத்தையும் எண்ணெய் சட்டியில் சேர்த்து வதக்க வேண்டும்.
  • வதக்கிய பொருட்கள் அனைத்தும் ஆறியதும், மிக்சி ஜாரில் சேர்த்து பவுடராக அரைத்து கொள்ள வேண்டும்.
  • பின் அரைத்த பவுடரை ஒரு தட்டில் பரவலாக ஆக்க வேண்டும்.
  • பின் ஆறிய பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும்.

சீயக்காய் அரைக்க தேவையான பொருட்கள்

அப்ளை செய்யும் முறை:

  • ஒரு கிண்ணத்தில் உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்து உள்ள வேண்டும். இதில் அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு கலந்து விட வேண்டும்.
  • அதன் பிறகு இதனை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 10 நிமிடம் வரைக்கும் ஊற வைக்க வேண்டும்.
  • 10 நிமிடம் கழித்து தலையை நன்றாக தேய்த்து அலசி கொள்ள வேண்டும்.
  • இது போல வாரத்தில் ஒரு நாள் இந்த மூலிகை பவுடரை தேய்த்து குளிக்க வேண்டும். இது போல தொடர்ந்து செய்து வருவதன் மூலம் தலைமுடி உதிர்வது நின்று தலைமுடி வளருவதை நீங்களே காணலாம்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement