முடி கொட்டும் பிரச்சனைக்கு ஒரு சூப்பர் தீர்வு -செம்பருத்தி எண்ணெய்..!

Advertisement

செம்பருத்தி எண்ணெய் (Hibiscus Oil) தயாரித்தல்..!

செம்பருத்தி எண்ணெய்(sembaruthi oil) செய்முறை: செம்பருத்தி இயற்கை தாவரங்களில் ஒன்று. பலவகை மருத்துவ தன்மைகளை கொண்டது. அதிக குளிர்ச்சி தன்மையுடையது. மேலும் செம்பருத்தி எண்ணெய் தலை முடி உதிர்வுக்கு, பொடுகு தொல்லைக்கு, முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர, கூந்தல் அடர்த்தியாக வளர, கூந்தல் ஆரோக்கியத்திற்கு என்று பலவகையான கூந்தல் பிரச்சனைகளுக்கு செம்பருத்தி எண்ணெய் (hibiscus oil) நல்ல தீர்வினை வழங்குகிறது. தலை முடி நன்கு வளர, இந்த செம்பருத்தி எண்ணெய் (hibiscus oil) நல்ல பலனளிக்கக்கூடியது.

இந்த செம்பருத்தி எண்ணெய் (hibiscus oil) சந்தையில் பலவகை உள்ளது. இருப்பினும் அவையெல்லம் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்று நமக்கு தெரியாது. சரி இந்த செம்பருத்தி எண்ணெய்யை இயற்கையான முறையில், நம் வீட்டில் எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம் வாருங்கள்.

செம்பருத்தி

செம்பருத்தி எண்ணெய் (Hibiscus Oil) செய்ய தேவைப்படும் பொருட்கள்:

  1. செம்பருத்தி பூ – 10
  2. செம்பருத்தி இலை – 10
  3. தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்
  4. வேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
  5. கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு

மீசை தாடி வேகமாக வளர சூப்பர் டிப்ஸ்..!

செம்பருத்தி எண்ணெய் செய்முறை(sembaruthi oil seivathu eppadi):

இந்த செம்பருத்தி எண்ணெய் செய்வதற்கு பிரஷ் ஆன 10 சிவப்பு செம்பருத்தி பூக்களும், 10 செம்பருத்தி இலைகளும் தேவைப்படும்.

அவற்றை பொடிதாக நறுக்கி, மிக்சியில் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து கொள்ளவும். அவற்றில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி, சூடேற்றவும், எண்ணெய் சூடேறியதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, அரைத்த கலவையை எண்ணெயில் சேர்க்க வேண்டும்.

பின்பு அதனுடன் சிறிதளவு வேப்பிலையை சேர்க்கவேண்டும். வேப்பிலை பொடுகு பிரச்சனையை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.

தங்களுக்கு பொடுகு பிரச்சனை இருந்தால் எண்ணெயில் சிறிதளவு வேப்பிலையை சேர்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் சேர்த்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

பிறகு இந்த எண்ணெயில் சிறிதளவு கருவேப்பிலை சேர்க்க வேண்டும். கருவேப்பிலை தலை முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்து, தலை முடி நன்கு வளர உதவுகிறது.

செம்பருத்தி, கறிவேப்பிலை, வேப்பிலை போன்றவை நன்றாக எண்ணெய்யில் சேர்ந்ததும், அடுப்பை அணைத்து விட வேண்டும்.

பின்பு இந்த செம்பருத்தி எண்ணெய்யை நன்றாக ஆற வைத்து, வடிகட்டி பாட்டிலில் ஊற்றி பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

உங்களுக்கு தெரியுமா முடியை கருப்பாகும் பீட்ரூட் ஹேர் டை?

செம்பருத்தி எண்ணெய் பயன்படுத்தும் முறை(hibiscus oil using method)..!

இந்த எண்ணெய்யை தலையில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்து காலையில் தலைகுளிக்க வேண்டும்.

அல்லது தலை குளிப்பதற்கு முன் இந்த செம்பருத்தி எண்ணெய்யை தலையில் தேய்த்து மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து அதாவது 1/2 மணி நேரம் கழித்து, பின்னர் தலை குளிக்கவும்.

தாங்கள் இந்த செம்பருத்தி எண்ணெய்யை தினசரி பயன்படுத்தும் கூந்தல் எண்ணெய்யாக கூட பயன்படுத்தலாம்.

இந்த எண்ணெய்யை வாரத்தில் இரண்டு முறையாவது கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இந்த செம்பருத்தி எண்ணெயை ஆண்களும் பயன்படுத்தலாம்.

செம்பருத்தி எண்ணெய் பயன்கள் (sembaruthi hair pack tips tamil):

செம்பருத்தி (hibiscus oil) தலை முடி வளர்ச்சியை தூண்டும், உதிர்ந்த முடிகளை மீண்டும் வளர செய்யும், கூந்தல் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும், தலை முடி அடர்த்தியை அதிகரிக்கும், பொடுகு தொல்லையை சரி செய்யும், தலை அரிப்பு மற்றும் நரைமுடிகளை தடுக்கும்.

கூந்தல் முடி 5 மடங்கு அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும் ..!

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement