முடியின் வளர்ச்சியை அதிகரிக்க இந்த ஒரு பூ போதுமா ஆச்சரியமா இருக்கே..!

Advertisement

முடி வளர்ச்சியை அதிகரிக்க

ஹாய் பிரண்ட்ஸ்..! பொதுவாக எல்லோரும் முடி நீளமாக வளர வேண்டும் என்று நினைப்பார்கள். எவ்வளவு முடி இருந்தாலும் மேலும் முடி வளர வேண்டும் என்ற ஒரு சின்ன ஆசை இருக்கும். அதற்காக சிலர் எவ்வளவோ பணம் செய்வார்கள். அதன் பிறகு பணம் செலவு செய்து எந்த முன்னேற்றமும் இல்லை என்று புலம்புவார்கள்.

இனி நீங்கள் பணமும் செலவு செய்ய வேண்டாம் முடி வளரவில்லை என்று புலம்பவும் வேண்டாம். உங்களுக்கு பயனளிக்கும் வகையில் இன்றைய அழகுக்குறிப்பு பதிவு இருக்கும். முடி வளர்ச்சியை இருமடங்கு அதிகரிக்க இந்த ஒரு பூ போதும். சரி வாங்க அது என்ன பூ அதை எப்படி முடிக்கு அப்ளை செய்வது என்று படித்து தெரிந்துக்கொள்வோம்.

இதையும் படியுங்கள்⇒ வெறும் 5 நிமிடத்தில் முகத்தை பரு இல்லாமல் வெள்ளையாக மாற்றலாமா ஆச்சரியமா இருக்கே..!

Hibiscus Leaves For Hair in Tamil:

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க செம்பருத்தி பூ மற்றும் இலையை எப்படி பயன்டுத்துவது என்று மூன்று டிப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

டிப்ஸ்- 1

கற்றாழை ஜெல்

முதலில் 10 செம்பருத்தி பூக்களை சுத்தமான தண்ணீரில் அலசி ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு கற்றாழை ஜெல் 4 ஸ்பூன் எடுத்துக்கொண்டு செம்பருத்தி பூ இருக்கும் கிண்ணத்தில் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ளுங்கள்.

இப்போது நீங்கள் தயார் செய்த பேஸ்டை உங்களுடைய தலையில் அனைத்து இடங்களிலும் நன்றாக அப்ளை செய்து 1/2 மணிநேரம் அப்படியே வைத்து விடுங்கள்.

அதன் பிறகு நீங்கள் எப்போதும் போல தலையை அலசி விடுங்கள். வாரத்திற்கு 2 முறை இது மாதிரி செய்தால் நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு முடி நீளமாக வளரும்.

டிப்ஸ்- 2

sembaruthi poo

அடுத்த டிப்ஸ் என்னவென்றால் 8 செம்பருத்தி பூக்களை தண்ணீரில் அலசி அதனை மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள். இப்போது அரைத்த செம்பருத்தி பேஸ்டுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 3 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் Hair Pack தயாராகிவிட்டது.

அதன் பிறகு உங்களுடைய தலையில் 5 நிமிடம் தேங்காய் எண்ணெய் தடவி விடுங்கள். 5 நிமிடம் கழித்து நீங்கள் தயார் செய்த Hair பேக்கை முடியில் தடவி 20 நிமிடம் கழித்து தலை குளித்து விடுங்கள்.

வாரத்திற்கு 1 முறை இதுமாதிரி தலை குளிங்கள் முடி நன்றாக அடர்த்தியாக வளரும். 

அரிசி மாவை இப்படி ஒரு முறை அப்ளை செய்து பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்…!

டிப்ஸ்- 3

செம்பருத்தி பூ

கடைசி டிப்ஸ் செய்வதற்கு 6 செம்பருத்தி பூ மற்றும் 8 செம்பருத்தி இலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது எடுத்துவைத்துள்ள இரண்டு பொருட்களையும் தண்ணீரில் அலசி மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதனுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்த்து 5 நிமிடம்  நன்றாக கொதிக்க  விடுங்கள்.

5 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து விட்டு தயார் செய்த எண்ணெயை நன்றாக ஆற விடுங்கள். எண்ணெய் ஆறியதும் உங்களுடைய முடியில் அப்ளை செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். 20 நிமிடம் கழித்து தலையை வழக்கம் போல அலசி விடுங்கள்.

மேலே சொல்லப்பட்டுள்ள மூன்று டிப்ஸ்களில் ஏதாவது ஒன்றை நீங்கள் செய்தால் போதும். அதற்கு பிறகு முடி வளர்ச்சியை கண்டு நீங்களே மகிழ்வீர்கள்.

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement