வழுக்கை தலையிலும் முடி வளர தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் போதும்

home remedies for hair fall and regrowth in tamil

வழுக்கை தலையில் முடி வளர என்ன செய்ய வேண்டும் | Home Remedies For Hair Fall And Regrowth in Tamil

இருபாலருக்கும் அழகான தோற்றத்தை பெறுவதற்கு முடி முக்கிய பங்காக இருக்கிறது. வயதான காலத்திற்கு பிறகு தோன்றும் வழுக்கையெல்லாம் இப்பொது இளம் வயதிலே தோன்றுகிறது. எந்த பிரச்சனையும் ஆரம்பத்திலே பார்த்து சரி செய்திட முடியும். அதனால் இந்த பதிவில் வழுக்கை தன்மையிலும் முடி வளர சில எண்ணெய்களை பதிவிட்டுளோம். இந்த பதிவில் ஏதவாது ஒரு எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தினாலே நிச்சயம் ரிசல்ட் கிடைக்கும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஆமணக்கு எண்ணெய்:

வழுக்கை தலையில் முடி வளர என்ன செய்ய வேண்டும்

 

ஆமணக்கு எண்ணெயில் அலர்ஜி எதிர்ப்பு பண்பை கொண்டுள்ளது. 

ஆமணக்கு எண்ணெய் 2 தேக்கரண்டி எடுத்து லேசாக சூடுபடுத்தி கொள்ளவும். இந்த எண்ணெயை குளிப்பதற்கு முன்பு தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு குளிக்கவும். இந்த முறையை வாரத்திற்கு 3 அல்லது 4 முறை செய்ய வேண்டும்.

தேங்காய் எண்ணெய்:

வழுக்கை தலையில் முடி வளர என்ன செய்ய வேண்டும்

 தேங்காய் எண்ணெயில் முடிக்கு ஊட்டமளிக்கும் கொழுப்புகள், ஆல்பா டோகோபெரால் போன்றவை உள்ளன. இவை உச்சந்தலையை புத்துணர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்து கொள்ள உதவுகிறது. மேலும் முடியை பலமாக வளரவும் உதவுகிறது.  

தேங்காய் எண்ணெயை 2 தேக்கரண்டி எடுத்து லேசாக சூடுபடுத்தி கொள்ளவும். இந்த எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்யவும். 4 மணி நேரம் கழித்து தலை குளிக்கவும். இல்லையென்றால் இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் எழுந்து குளித்து விடலாம். இதனை வாரத்திற்கு 2 முறை செய்ய வேண்டும்.

மிளகுக்கீரை எண்ணெய்:

வழுக்கை தலையில் முடி வளர என்ன செய்ய வேண்டும்

ஒரு கிண்ணத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி அதில் மிளகு கீரை எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த எண்ணெயை தலை முடி முழுவதும் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு ஷாம்பு பயன்படுத்தி தலை குளிக்கலாம். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்தால் போதும்.

பூசணி விதை எண்ணெய்:

பூசணி விதை எண்ணெய்

பூசணி விதை எண்ணெய் 1 தேக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த எண்ணெயை இரவு தூங்குவதற்கு முன்பு தடவி இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் எழுந்து குளித்து விடலாம். இந்த பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த வேண்டும்.

கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய்:

வழுக்கை தலையில் முடி வளர என்ன செய்ய வேண்டும்

தேங்காய் எண்ணெய் 100 எடுத்து கொள்ளவும். அதில் 4 கற்பூரத்தை எடுத்து நசுக்கி அதில் போடவும். இந்த எண்ணெயை காற்று புகாத டப்பாவில் சேர்த்து மூடி வைக்க வேண்டும். இந்த எண்ணெயை இரவு தூங்குவதற்கு முன்பு தலையில் அப்ளை செய்து காலையில் எழுந்து குளித்து விடலாம்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil