செம்பருத்தி இலை முடி வளர
பெரும்பாலும் பெண்கள் அனைவரும் தலைக்கு செம்பருத்தி இலையினை பேஸ்ட் போல அரைத்து தலைக்கு தேய்த்து குளிப்பார்கள். ஏனென்றால் அவ்வாறு குளிக்கும் போது உடல் கூடு குறையும் என்பது சாத்தியமான ஒன்று. ஆனால் செம்பருத்தி இலை உடல் சூட்டினை குறைப்பதோடு மட்டும் இல்லாமல் தலையில் முடி உதிர்வை குறைத்து முடியினை 2 மடங்கு வரை அடர்த்தியாக வளர உதவி புரியும். ஆனால் நாம் யாரும் இதனை முடி உதிர்வுக்காக பெரும்பாலும் பயன்படுத்துவது இல்லை. எனவே இன்றைய பொதுநலம். காம் அழகுக்குறிப்பு பதிவில் செம்பருத்தி இலை மூலம் முடியினை எப்படி அடர்த்தியாக வளர செய்வது என்று பார்க்கப்போகிறோம். சரி வாருங்கள் நேரத்தை தவறவிடாமல் விரைவாக முடி உதிர்வு குறைந்து முடி வளர என்ன செய்வது என்று பதிவில் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Home Remedies For Hair Fall Control and Growth:
அனைவருடைய வீட்டிலும் கிடைக்கக்கூடிய செம்பருத்தி இலையுடன் சில பொருட்களை சேர்த்து எப்படி முடியின் வளர்ச்சி அதிகரிக்க செய்வது என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த செம்பருத்தி இலையானது உடல் சூடு குறையவும், தலையில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளரவும் மற்றும் பொடுகு தொல்லையினை சரி செய்யவும் என நிறைய வற்றிற்கு பயன்படுகிறது.தேவையான பொருட்கள்:
- செம்பருத்தி – 1 கைப்பிடி அளவு
- நெல்லிக்காய் பவுடர்- 4 ஸ்பூன்
- முட்டை- 2
இதையும் படியுங்கள்⇒ நீங்களே நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு முக பளபளப்புக்கு இதை ட்ரை பண்ணுங்க
ஹேர் பேக் செய்வது எப்படி..?
ஸ்டேப்- 1
முதலில் எடுத்துவைத்துள்ள செம்பருத்தி இலையினை ஒரு கிண்ணத்தில் சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொண்டு தூசி எதுவும் இல்லாமல் செம்பருத்தி இலையினை சுத்தமாக அலசி வைத்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 2
பின்பு ஒரு மிக்சி ஜாரில் அலசி வைத்துள்ள செம்பருத்தி இலையினை போட்டு நன்றாக பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள். இப்போது அரைத்து வைத்துள்ள செம்பருத்தி இலை சாற்றினை ஒரு கிண்ணத்தில் காட்டன் துணி வைத்து சாறு பிழிந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
நெல்லிக்காயில் வைட்டமின் C இருப்பதால் இது முடி வளர்ச்சிக்கு சிறந்த ஒன்றாக உள்ளது. ஆகாயல் ஒரு கிண்ணத்தில் 4 ஸ்பூன் அளவிற்கு நெல்லிக்காய் பவுடர் எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 6
இப்போது கிண்ணத்தில் இருக்கும் நெல்லிக்காய் பவுடருடன் சாறு பிழிந்து வைத்துள்ள செம்பருத்தி இலை சாற்றினை சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை கலந்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 7
5 நிமிடம் கழித்த பிறகு கலந்து வைத்துள்ள பேஸ்டுடன் உங்களுடைய முடிக்கு ஏற்ற அளவு 1 அல்லது 2 முட்டையின் மஞ்சள் கருவினை மட்டும் சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் கலந்து கொள்ளுங்கள்.
இப்போது உங்களுடைய முடி உதிர்வை தவிர்த்து முடியினை அடர்த்தியாக வளர வைக்க கூடிய ஹேர் பேக் தயார்.
இதையும் படியுங்கள்⇒ 24 மணி நேரமும் உங்களின் முகம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமா..? அப்போ ஆரஞ்சு பழத்தோலை இப்படி பயன்படுத்துங்க போதும்..
Hair Pack Apply Method:
தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை அப்ளை செய்வதற்கு முன்பு உங்களுடைய தலையில் நன்றாக தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து அதன் பிறகு தான் ஹேர் பேக் அப்ளை செய்ய வேண்டும்.
ஹேர் பேக் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து வழக்கம் போல தலை குளித்து விடுங்கள். இவ்வாறு நீங்கள் வாரம் 2 முறை என 3 மாதம் வரை செய்தால் போதும் முடி உதிர்வு குறைந்து முடி அடர்த்தியாக வளரும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |