முகத்தை ஜொலிஜொலிக்க செய்யும் அழகு குறிப்பு டிப்ஸ் (beauty face tips in tamil)..!
அழகு குறிப்பு: உடல் முழுவதும் வெள்ளையாக என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பலர் என்ன தான் சருமத்தை பாதுகாத்தாலும், ஒரு சில நேரங்கள் வரை தான் சருமம் ஜொலிஜொலிப்பாக இருக்கும். இருப்பினும் காலை முதல் மாலை வரை சருமம் ஜொலிஜொலிப்பாகவும், அழகாகவும் இருக்க வேண்டுமா? அப்போ இந்த அழகு குறிப்பு டிப்ஸ் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த அழகு குறிப்பு டிப்ஸ் (beauty face tips) இரவு முழுவதும் சருமத்தில் பேக்காக போட்டு, மறுநாள் முகத்தை குளிர்ந்த நீரில் அல்லது வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
அதேபோல், தினமும் அல்லது வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால். சருமம் புத்துணர்ச்சி அடைந்து, காலை முதல் மாலை வரை ஜொலிஜொலிப்பாக காணப்படும்.
![]() |
அழகு குறிப்பு டிப்ஸ் – வெள்ளரிக்காய்:
இரவு தூங்குவதற்கு முன் வெள்ளரிக்காயை நன்றாக மசித்து முகத்தில் பேக்காக போட்டு, மறுநாள் காலை சருமத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு தினமும் செய்து வர சருமம் பளபளப்பாகவும், புத்துணர்ச்சி அடைந்தும். அன்று காலை முதல் மாலை வரை முகம் ஜொலிஜொலித்து காணப்படும்.
அழகு குறிப்பு டிப்ஸ் – கற்றாழை ஜெல்:
கற்றாழையில் அதிகளவு சருமத்திற்கு பயனளிக்க கூடிய, இயற்கை மருத்துவ குணங்கள் அதிகமாகவே உள்ளது. எனவே தினமும் இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்து.
அப்படியே இரவு முழுவதும் வைத்திருந்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்வதினால் சருமம் செல்களுக்கு புத்துயிர் அளித்து, அன்று முழுவதும் சருமம் மென்மையாக, பளபளப்பாக காணப்படும்.
அழகு குறிப்பு டிப்ஸ் – பாதாம் எண்ணெய்:
பாதாம் எண்ணெயில் அதிகளவு ஈரப்பதம் உள்ளது என்பதால், இரவு தூங்குவதற்கு முன், இந்த பாதாம் எண்ணெயை சருமத்தில் தடவி, ஐந்து நிமிடங்கள் வரை முகத்தை நன்றாக மசாஜ் செய்து.
இரவு முழுவது வைத்திருந்து மறுநாள் காலை வெதுவெதுப்பான நீரால் சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் காணப்படும்.
![]() |
அழகு குறிப்பு டிப்ஸ் – பால் ஆடை:
காலையில் எழுந்தவுடன் சருமம் புத்துணர்ச்சியாகவும், பொலிவுடனும் மேலும் சருமம் மென்மையாகவும் இருக்க வேண்டுமா? அப்போ தினமும் இரவு தூங்குவதற்கு முன் பால் ஆடையில் இரண்டு துளிகள் எலுமிச்சை சாறு கலந்து, அவற்றை சருமத்தில் அப்ளை செய்து, சிறு நேரம் மசாஜ் செய்து பின்பு இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து, காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரால் சருமத்தை கழுவினால், அன்றைய நாள் முழுவது சருமம் மென்மையாகவும், ஜொலிஜொலிப்பாகவும் காணப்படும்.
அழகு குறிப்பு டிப்ஸ்விட்டமின் இ ஆயில்:
இரவு தூங்கும் போது விட்டமின் இ மாத்திரையில் உள்ள எண்ணெயை சருமத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்பு இரவு முழுவது வைத்திருந்து காலை எழுந்ததும், குளிர்ந்த நீரால் அல்லது வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்வதினால், சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்பட்டு. சருமம் அன்று முழுவதும் ஜொலிஜொலிப்பாக காணப்படும்.
![]() |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |