கண் சுருக்கம் நீங்க சில அழகு குறிப்பு டிப்ஸ் இதோ..!

கண் சுருக்கம் நீங்க

கண் சுருக்கம் நீங்க சில அழகு குறிப்பு டிப்ஸ் இதோ..!

கண் சுருக்கம் நீங்க:- கண்களுக்கு கீழ் உள்ள சருமம் மிகவும் சென்சிடிவ்வான பகுதியாக இருப்பதினால் இதற்கு அதிக கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். ஆனால் நாமோ இந்த பகுதிக்கு அதிகமான கவனத்தை செலுத்துவது இல்லை. இதனால் கருவளையங்கள், வீங்கிய கண்கள், கண் சுருக்கம்(home remedies for under eye wrinkles) மற்றும் சோர்வான கண்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

சரி கண்ணுக்கு கீழ் உள்ள சுருக்கம் மறைய வீட்டிலேயே செய்யக்கூடிய சில அழகு குறிப்பு டிப்ஸ் பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க…

newகடலை மாவு முகத்திற்கு தரும் அழகு ரகசியங்கள்..!

கண் அழகு குறிப்புகள் – கண் சுருக்கம் நீங்க (home remedies for under eye wrinkles):

கண் சுருக்கங்கள் நீங்க(kan surukkam neenga):- ஆரஞ்சு பழத்தோல் மற்றும் வேப்ப எண்ணெய் இரண்டும் பயன்படுகிறது. ஆரஞ்சு பழம் தோல் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த உதவுவதால், கண்களில் உள்ள சுருக்கத்தை சரிசெய்ய பயன்படுகிறது. மேலும் வேப்ப எண்ணெய் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால், கண்களை பாதுகாக்க பயன்படுகிறது. சரி இதை இரண்டையும் பயன்படுத்தி செய்யக்கூடிய அழகு குறிப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • 1 தேக்கரண்டியளவு ஜோஜோபா எண்ணெய்
  • 1 தேக்கரண்டி அரைத்த ஆரஞ்சு தோல் பவுடர்,
  • 3 முதல் 4 துளி வேப்ப எண்ணெய்
newஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள்..!

கண் சுருக்கம் நீங்க (kan surukkam neenga) பேக் செய்முறை:

இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். பின் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். இந்த முறையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் கண் சுருக்கம் நீங்க (kan surukkam neenga) ஆரமிக்கும்.

கண் அழகு குறிப்புகள் – கண் வீக்கம் நீங்க:

சருமத்தில் ஈரப்பதத்தை மேம்படுத்துவதற்கான ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ரோஸ்மேரி எண்ணெயில் நிறைந்துள்ளன. இவை உங்கள் சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன. இதனால் உங்கள் கண் வீக்கம் (kan veekam kuraiya tips) விரைவில் குறைக்க உதவும். எலுமிச்சை எண்ணெயில் வலுவான ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால் இவை சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்களில் இருந்து பாதுகாக்கின்றன. லாவெண்டர் எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கண்களைச் சுற்றியுள்ள பகுதியை மென்மையாக்க உதவுகிறது.

சரி இவற்றை வைத்து செய்யக்கூடிய அழகு குறிப்பு டிப்ஸினை(கண் சுருக்கம் நீங்க) பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

Kan Veekam Kuraiya tips – தேவையான பொருட்கள்:-

  1. ரோஸ்மேரி எண்ணெய் – 12 சொட்டுகள்
  2. லாவெண்டர் எண்ணெய் – 6 சொட்டுகள்
  3. பாதாம் எண்ணெய் – 5 மில்லி

கண் சுருக்கம் நீங்க – செய்முறை:

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் கண்களை சுற்றி அப்ளை செய்ய வேண்டும். பின் 2 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின் 2 அல்லது 3 மணிநேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கண்களை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர கண் வீக்கம் குறைய (kan veekam kuraiya tips) ஆரம்பிக்கும்.

கண் அழகு குறிப்புகள் – கண் சோர்வு நீங்க:

சிலருக்கு கண்கள் எப்பொழுதும் பொலிவிழந்து மிகவும் சோர்வாக (kan sorvu) காணப்படும். அவர்களுக்கான அழகு குறிப்பு டிப்ஸ் இதோ. 

2 தேக்கரண்டியளவு ஜோஜோபா எண்ணெய்,

1 தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய்,

2 தேக்கரண்டியளவு அப்ரிகாட் கர்னல் எண்ணெய்,

2 தேக்கரண்டியளவு அவோகேடா எண்ணெய்.

அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி கண்களைச் சுற்றித் தடவிவிட்டு படுகைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து கழுவுங்கள். இதனைத் தினமும் இரவு செய்யலாம். இவ்வாறு தினமும் செய்து வருவதினால் கண் சோர்வு நீங்க ஆரம்பிக்கும்.

newமஞ்சள் பல் வெள்ளையாக என்ன செய்ய வேண்டும்???
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Beauty tips in tamil