ஒரே வாரத்தில் கைகளில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா.?

Wrinkles Hands

கைகளில் உள்ள சுருக்கங்கள்(Wrinkles Hands) மறைய:

நம்மில் பெரும்பாலோனர் முகத்தின் அழகிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கைகள் மற்றும் கால்களை பராமரிப்பதற்கு தருவதில்லை. நமது முகத்திற்கு அடுத்தபடியாக மற்றவர்களது கண்களுக்கு தெரிவது நமது கைகளும் கால்களும் தான்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை நாம் பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியமல்லவா…? நமது முதுமை தோற்றத்தை வெளிப்படுத்துவது முதலில் நமது கைகள் தான்.

ஆனால் சிலருக்கு கைகளில் சின்ன வயதிலேயே சுருக்கங்கள் (Wrinkles Hands) வந்து அவர்களது தோற்றத்தை முதுமையாக காட்டும். இந்த சுருக்கங்கள் நீடித்து இருக்க கூடியவை அல்ல. இந்த சுருக்கங்களை நாம் எளிதாக போக்கலாம்.

இந்த பகுதியில் உங்களது முதுமை தோற்றத்தை வெளிப்படுத்தும் இந்த சுருக்கங்களை (Wrinkles Hands) போக்க சில வீட்டிலேயே செய்யக் கூடிய சிகிச்சை முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி நீங்கள் சிறந்த பலனை பெறலாம்.

தக்காளி:

தக்காளி பொதுவாக அனைவர் வீட்டிலும் பயன்படுத்த கூடிய பொருள், இவற்றில் பலவகையான சத்துக்கள் நிறைந்துள்ளது, மேலும் சர்ம அழகை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

இந்த தக்காளியை சரி பாதியாக அறிந்து கொண்டு, அவற்றை தங்களது கை மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, ஒரு 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் கழுவ கை (Wrinkles Hands) மற்றும் கால்களில் உள்ள கருமை நிறங்கள் மற்றும் சுருக்கங்கள் அனைத்தும் மறைந்து, மிகவும் வெண்மையாக காட்சியளிக்கும், இந்த முறையை தினமும் செய்து வர வேண்டும்.

newதலைமுடி அடர்த்தியாக வளர செய்யும் கண்டிஷனர்..!

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் அதிகளவு இரும்பு சத்து, கனிமச்சத்து ஏராளமாக உள்ளது. மேலும் சரும பராமரிப்புக்கு அதிகளவு உதவுகிறது.

இந்த வாழைப்பழத்தை தினமும் நன்றாக மசித்து அவற்றை கை மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய, சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் கை மற்றும் கால்களில் உள்ள சுருக்கங்கள் மறைவதுடன், கை (Wrinkles Hands) மற்றும் கால்கள் மிகவும் மென்மையாக இருக்கும்.

இந்த முறையை தினமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, இருந்தாலும் வாரத்தில் இரண்டு முறை செய்து வரவும்.

ஆலிவ் ஆயில்:

ஆலிவ் ஆயில் பொதுவாக சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கக்கூடியது, எனவே தினமும் ஆலிவ் ஆயிலை தங்களது கை மற்றும் கால்களில் நன்றாக தடவி சுமார் 30 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும், பின்பு குளிர்ந்த நீரால் கழுவவும்.

இவ்வாறு செய்வதினால் கை (Wrinkles Hands) மற்றும் கால்களில் உள்ள சுருக்கங்கள் மறைய செய்வதுடன், சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது.

அன்னாசி பழம்:

அன்னாசி பழத்தில் விட்டமின் சி அதிகளவு உள்ளது, எனவே சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை மறைய செய்ய வேண்டும் என்றால், அன்னாசி பழத்தை பேஸ்ட் போல் அரைத்து கொண்டு அவற்றை கை மற்றும் கால்களில் நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

பின்பு 15 நிமிடங்கள் வரை காத்திருக்கவும், அதன்பிறகு குளிர்ந்த நீரால், கைகள் மற்றும் கால்களை கழுவவும்.

இவ்வாறு செய்வதினால் கைகள் (Wrinkles Hands) மற்றும் கால்களில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கருமையான நிறங்கள் மறைந்துவிடும்.

இந்த முறையை தினமும் செய்து வரவும்.

newவாழைப்பழ தோல் போதுமே! ஜொலி ஜொலிக்கும் அழகுக்கு!

எலுமிச்சை பழம்:

எலுமிச்சை பழத்தை சரும பராமரிப்புக்கு அதிகளவு பயன்படுத்துவோம், எனவே இந்த எலுமிச்சை பழத்தின் சாற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.

அதன் பிறகு ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்து கொள்ளவும், இந்த கலவையை தங்களது கைகள் மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.

இவ்வாறு செய்த பிறகு சிறிதளவு காய்ச்சாத பால் எடுத்து கொள்ளவும். அவற்றை திரும்பவும் தங்களது கை மற்றும் கால் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

அதன் பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும், இவ்வாறு செய்வதினால் கைகளில் உள்ள சுருக்கங்கள் (Wrinkles Hands)  மறையும்.

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காயை நன்றாக அரைத்து அவற்றை கைகளில் தடவி 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து, பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவி வர கைகளில் உள்ள சுருக்கங்கள் (Wrinkles Hands) மறைத்துவிடும்.

அரிசி மாவு:

அரிசி மாவு இரண்டு ஸ்பூன் எடுத்து கொள்ளவும், அதனுடன் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் ஒரு ஸ்பூன் பால் நன்றாக கலந்து கொள்ளவும், இந்த கலவையை தங்களது கைகளில் தடவி 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து.

பின்பு வெது வெதுப்பான நீரை கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் கைகளில் உள்ள சுருக்கங்கள் (Wrinkles Hands) மறையும்.

newரோஜா இதழ்களை வைத்து அசத்தலான 5 டிப்ஸ்..!
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil