வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பாத வெடிப்புக்கு இதைவிட சிறந்த வைத்தியம் இல்லை..!

Updated On: March 21, 2025 7:14 PM
Follow Us:
cracked heels
---Advertisement---
Advertisement

பாத வெடிப்பு குணமாக கிரீம்

பாத வெடிப்பு குணமாக: பாத வெடிப்பால் பலர் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பாத வெடிப்பிற்கான காரணமும் பலருக்கு தெரியாமல் இருக்கிறது. சாதாரண பாத வெடிப்புதானே (cracked heels) என்று விட்டுவிடக் கூடாது.

குறிப்பாக பாத வெடிப்பானது, பாதங்களை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பதால் உண்டாகிறது. இதனால் வெடிப்புகள் ஏற்பட்டு, அந்த பாத வெடிப்பு (cracked heels) புண்களாக மாறி நடக்கும் போது மிகவும் அதிக வலியை தரும்.

இந்த பாத வெடிப்பு (cracked heels) மூலமாக கிருமிகள் தொற்று உண்டாகும் வாய்ப்பு உள்ளது. பாத வெடிப்பு உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் உண்டாகிறது.

newமுகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க – அழகு குறிப்புகள் !!!

இந்த பாத வெடிப்பு குணமாக வீட்டில் இருக்கும் இரண்டு பொருட்கள் போதும், நமது பாதங்களின் அழகை கெடுக்கும் இந்த பாத வெடிப்பை சீக்கிரமாக போக்க வீட்டிலேயே செய்யக் கூடிய ஒரு இயற்கை கிரீம் (foot crack cream) தயாரிக்கலாம் வாங்க..!

பாத வெடிப்பு குணமாக கிரீம் – தேவையான பொருட்கள்:

  1. வெற்றிலைக்கு பயன்படுத்தும் சுண்ணாம்பு – ஓரு ஸ்பூன்
  2. தேங்காய் எண்ணெய் – இரண்டு ஸ்பூன்

பாத வெடிப்பு குணமாக கிரீம் – செய்முறை:

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சுண்ணாம்பு மற்றும் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்பு அவற்றை நன்றாக கலந்து கொள்ளுங்கள், அவ்வளவுதான் கிரீம் (foot crack cream) தயார். தேங்காய் எண்ணெய்க்கு பதில் விளக்கெண்ணெய் கூட பயன்படுத்தி கொள்ளலாம்.

பாத வெடிப்பு குணமாக கிரீம் – தேவையான பொருட்கள்:

  • தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • கிளிசரின் – 1 டீஸ்பூன்
  • வைட்டமின் ஈ காப்ஸ்யூல் – 1

பாத வெடிப்பு குணமாக கிரீம் – செய்முறை:

  • முதலில், ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 ஸ்பூன் கிளிசரின் மற்றும் ஒரு வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இதை இரவில் பயன்படுத்த வேண்டும், அதற்காக உங்கள் கால்களை ஒரு வாளி சூடான நீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • ஆதன் பிறகு காலை நன்கு துடைக்க வேண்டும்.
  • இப்போது தூங்குவதற்கு முன், தயாரிக்கப்பட்ட கிரீம் உங்கள் கால்களில் அப்ளை செய்து, பின்னர் காட்டன் சாக்ஸ் அணிந்து தூங்கச் செல்லுங்கள்.
  • காலையில் உங்கள் குதிகால் முற்றிலும் மென்மையாக மாறியிருப்பதைக் காண்பீர்கள்.
  • இதை மூன்று அல்லது நான்கு நாட்கள் செய்து பாருங்கள், உங்கள் குதிகால் மிகவும் மென்மையாக மாறும்.

நன்மைகள்:

  • கிளிசரின் நமது சருமத்திற்கு இயற்கையான மாய்ஸ்சரைசராக (Moisturizer) செயல்படுகிறது, எனவே உங்கள் குதிகால் வெடிப்புகளில் இதைப் பயன்படுத்தும்போது, அவற்றை விரைவாக குணப்படுத்த இது நன்மை பயக்கும்.
  • கிளிசரின் வேறு ஏதேனும் மூலப்பொருளுடன் கலந்து மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் நீங்கள் அதை உங்கள் தோலில் நேரடியாகப் பயன்படுத்தினால், அது எரிச்சலை ஏற்படுத்தும்.
newவாழைப்பழ தோல் போதுமே! ஜொலி ஜொலிக்கும் அழகுக்கு!

பாத வெடிப்பு குணமாக கிரீமை பயன்படுத்தும் முறை:

பாத வெடிப்பு குணமாக: தினமும் இரவு தூங்குவதற்கு முன், கால்களை சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து, பழைய டூத் பிரஷை பயன்படுத்தி கால்களில் இருக்கும் அழுக்கை நீக்கிவிட்டு, பின்பு இந்த கிரீமை (foot crack cream) பாத வெடிப்பு (cracked heels) உள்ள இடத்தில் தடவி, இரவு முழுவதும் வைத்திருந்து, பின்பு மறுநாள் காலை எழுந்ததும் கால்களை கழுவி விடவும்.

இவ்வாறு தொடர்ந்து இந்த முறையை இரண்டு வாரங்கள் வரை செய்து வர கால்களில் உள்ள பாத வெடிப்புகள் மறைந்து விடும். பாத வெடிப்பு குணமாக இதைவிட சிறந்த வைத்தியம் இல்லை..!

newமுடி கொட்டும் பிரச்னைக்கு ஒரு சூப்பர் தீர்வு -செம்பருத்தி எண்ணெய்..!

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now