Homemade Bath Powder For Glowing Skin in Tamil
ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி முக அழகு என்பது மிகவும் முக்கியம். ஆனால் இப்போது இருக்கும் காலகட்டத்தில் மாசு, ஒழுங்கற்ற தூக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவின் காரணமாக அனைவருக்கும் சருமம் பொலிவிழந்து காணப்படுகிறது. இதனால் சருமத்திற்கு பல பிரச்சனைகள் வருகிறது. அதில் முக்கியமானது சருமம் கருமையடைவது. எனவே இதனை தடுக்க பலவிதமான கிரீம்களை பயன்படுத்தி இருப்போம். ஆனால் அவற்றையெல்லாம் ஒரு சில காலம் மட்டுமே பயன்படுத்த முடியும் தொடர்ந்து பயன்படுத்தினால் சருமத்திற்கு பல்வேறு தீங்குகள் ஏற்படும். எனவே இயற்கையான முறையில் முகத்தை கருமையிலிருந்து நீக்கி வெண்மையாகவும் பளபளப்பாகவும் வைப்பது என்பதை என்பதில் படித்து கொள்ளலாம் வாங்க.
How to Make Bath Powder at Home in Tamil:
குளியல் பொடி செய்ய தேவையான பொருட்கள்:
- அரிசி மாவு- 1/2 கப்
- கடலை மாவு- 2 ஸ்பூன்
- பீட்ரூட்- 1
குளியல் பொடி செய்யும் முறை:
முதலில் பீட்ரூட்டினை நன்றாக கழுவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து சாறினை மட்டும் நன்றாக பிழிந்து எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும், அதில் அரிசி மாவினை சேர்த்து கொள்ளுங்கள்.
அதில் கொஞ்சம் கொஞ்சமாக பீட்ரூட் சாறினை சேர்த்து கிளறி விடுங்கள். பீட்ரூட் சாறு அரிசி மாவில் நன்றாக கலக்கும் படி கலந்து விடவும்.
உதடு கருமையாக இருக்கிறதா? உதடு கருமையை போக்கும் ஹோம் மேடு லிப் பாம்..! |
பிறகு இதனுடன், கடலை மாவு சேர்த்து அதனையும் நன்றாக கலந்து விடுங்கள். இப்போது மீண்டும் கொஞ்சம் பீட்ரூட் சாறினை சிறிது சிறிதாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
இவை நன்றாக பவுடர் பதத்திற்கு வரும்வரை கட்டி இல்லாமல் கலந்து விடுங்கள். பிறகு இதனை சிறிது நேரம் ஆறவைத்து பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது இயற்கையான குளியல் பொடி தயார்.! இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்து குளிக்கும் போது பயன்படுத்தி கொள்ளுங்கள்.
அப்ளை செய்யும் முறை:
குளிக்கும் முன்பு, தயார் செய்துவைத்துள்ள குளியல் பொடியுடன் தயிர் அல்லது பால் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
இதனை 15 நிமிடங்கள் அப்படியே முகத்தில் வைத்து விட்டு பிறகு முகத்தை நன்றாக கழுவி விடுங்கள்.
அதுமட்டுமில்லாமல், இப்பொடியுடன் எதையும் சேர்க்காமல் உங்கள் உடம்பிலும் தேய்ந்து குளிக்கலாம்.
இவ்வாறு நீங்கள் 1 வாரம் தொடர்ந்து செய்வதன் மூலம் உங்கள் முகத்தில் உள்ள கருமையெல்லாம் நீங்கி முகம் வெண்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாக தெரிய பாலுடன் இதை கலந்து தடவுங்க..! |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |