வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இயற்கையாக வீட்டு முறையில் எளிமையான அழகு குறிப்புகள் 

Updated On: October 6, 2025 5:15 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

HomeMade Beauty Tips/வீட்டு முறையில்அழகு குறிப்பு 

 

இன்றைய பதிவில் வீட்டு முறையில் அழகு குறிப்புகள் பற்றி பார்க்க போகிறோம். நமது உடம்பு அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை ஆண், பெண் இருவருக்கும் இருக்கும். அதற்காக பல அழகு நிலையங்களுக்கு சென்று முகம் மற்றும் கை கால் போன்றவை  பளிச்சென்று இருக்க வேண்டும் என்று, அதிகம் பணம் செலவழிப்பார்கள். என்ன தான் நாம் பல அழகு நிலையத்துக்கு சென்று சருமத்தை அழகுபடுத்திக்கொண்டாலும், அங்கு பயன்படுத்தப்படும் கெமிக்கல் சருமத்திற்கு சில சமயங்களில் பலவகையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே சருமத்தின் அழகை அதிகரிக்க நினைப்பவர்கள் செயற்கை முறையை பின்பற்றுவதை இன்றுடன் கைவிடுங்கள். இயற்கை முறையில் நாம் வீட்டிலேயே சரும அழகை அதிகரிக்க  இங்கு பலவகையான இயற்கை அழகு குறிப்புகள் உள்ளது. அவற்றை பின்பற்றினாலே என்றும் முகம் பளிச்சென்று இருக்கும். இன்றைய பதிவில்  இயற்கையாக செலவே இல்லாமல் உடலை பொலிவாக வைத்திருப்பதற்கான அழகு குறிப்பு பற்றி பார்க்க போகிறோம்.

தேன்:

தேன் ஒரு சிறந்த moisturizer  மற்றும் சருமத்தை நன்கு நீரோட்டமாக வைத்திருக்க உதவுகிறது. தேனில் பாக்டீரியா மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கிறது. வாரம் இரண்டு முறை தேனை முகத்தில் தடவி வருவதன் மூலம். முகத்தில் முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது. தேனில் ஆக்ஸினேற்ற பண்புகள் அதிகமாக இருப்பதால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை மறைக்க உதவுகிறது.

பயன்படுத்தும் முறை:

உங்கள் முகத்தில் நேரடியாக தேனை பூசாமல், முகத்தை நன்கு கழுவி விட்டு முகத்தில் தேனை மசாஜ் செய்துக்கொள்ள வேண்டும். 30 நிமிடத்திற்கு பிறகு முகத்தை நீரில் கழுவ வேண்டும்.

கருத்து போன முகத்திற்கு இதை மட்டும் போட்டு பாருங்க.. 10 நிமிடத்தில் முகம் செம பிரைட்டா ஆகிடும்..!

பால்:

சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள பால்முக்கிய பங்கு வகிக்கிறது. லெமனின் கட்டுப்படுத்தும் ஹார்மோனான டைரோசின் சருமத்தை கருமையாக்குகிறது. பால்  டைரோசின் விளைவுகளை எதிர்த்து சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பதில் பச்சை பால் முக்கிய பங்கு வகிக்கிறது.

பயன்படுத்தும் முறை:

நீங்கள் பச்சை பாலை மட்டும் முகத்தில் தடவி கொள்ளலாம் அல்லது பால் தேன் மற்றும் மஞ்சள் சேர்த்து பேஸ்ட் ஆக செய்து முகத்தில் தடவி மசாஜ் செய்து கொள்ளலாம். இதை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடவும். இப்படி செய்வதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காய் வறண்ட சருமம் மற்றும் வெடிப்பு கருவளையங்களை சரிசெய்வதற்கு முக்கியபங்கு வகிக்கிறது. வெள்ளரிக்காயில் அதிக அளவு Ph தன்மையை கொண்டுள்ளது. இது சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் சருமத்தை நீரோட்டமாகவும் கண்ணில் ஏற்படும் கருவளையத்தை சரிசெய்யவும் உதவுகிறது.

பயன்படுத்தும் முறை:

வெள்ளெரிக்காயை துண்டாக நறுக்கி கண்ணில் வைத்து கொள்ளலாம் அல்லது  வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி கொள்ளலாம், வெள்ளரிக்காயின் சாறை எடுத்து ஐஸ் கட்டியாக்கி உடம்பில் மசாஜ் செய்துகொள்ளலாம்.

ஓட்ஸ்:

ஓட்ஸ் ஒரு திறமையான ஆன்டி- டானிங்  ஏஜென்ட் ஆகும். இது முகத்தை பளபளப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் முகத்தில் பருக்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. இது முகத்தை ஈரப்பதமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

பயன்படுத்தும் முறை:

இரண்டு தேக்கரண்டி ஓட்ஸ் மற்றும் பால் அல்லது தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி  15 நிமிடத்திற்கு பிறகு முகத்தை கழுவவும். 

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் ஆக்சிஜனேற்ற பண்புகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் சருமத்தில் ஏற்படும் வறட்சியை தடுத்து சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் சருமத்தை  பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.

பயன்படுத்தும் முறை:

தினமும் தேங்காய் எண்ணெய் 10 நிமிடம் மசாஜ் செய்து வருவதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

வாழைப்பழம்:

வாழைப்பழம் நமது உடலில் அதிக நன்மையை அளிக்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் எ மற்றும் பி நிறைந்துள்ளன. இவை முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், கருவளையங்கள் மற்றும் வெள்ளை தலைகளை  ஏற்படுவதை தடுப்பது மட்டுமல்லாமல் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.

பயன்படுத்தும் முறை:

ஒரு வாழை பழத்தை மசித்து அதில் தேன் அல்லது பால் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடத்திற்கு பிறகு கழுவி விடவும். அல்லது வாழைப்பழம் மற்றும் தேன், ரோஜா இதழ் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் களித்து முகத்தை கழுவ வேண்டும்.

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now