முகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்..! Homemade Face Wash Powder In Tamil..!

ஹெர்பல் பேக்

முகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர் (Homemade Face Wash Powder In Tamil)..!

homemade face wash powder in tamil: முகம் வெள்ளையாக மாற இப்போதெல்லாம் அனைவரும் கடைகளில் விற்கப்படும் பேஷ்வாஸ் பவுடரை வாங்கி பயன்படுத்துகின்றனர். அவையெல்லாம் முகம் வெள்ளையாக மாற பயன்படுமா என்று கேட்டால் நிச்சயமாக கேள்வி குறிதான். இருந்தாலும் நம் வீட்டிலேயே இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர் தயார் செய்து பயன்படுத்தும் போது, முகம் வெள்ளையாக மாற பயன்படுவதுடன், சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றது.

newபேரழகு முகத்திற்கான SPL சந்தனம் ஃபேஸ் பேக்!!! சந்தனம் அழகு குறிப்பு..!

 

சரி வாங்க இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர் (homemade face powder in tamil) எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க..!

முகம் சிவப்பாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர் தயாரிக்கும் முறை (Homemade Face Wash Powder In Tamil):

தேவையான பொருட்கள்:

 1. பால் பவுடர் – 4 டேபிள் ஸ்பூன்,
 2. ஓட்ஸ் பவுடர் – 3 டேபிள் ஸ்பூன்,
 3. கடலை மாவு (kadalai maavu for face in tamil) – 2 டேபிள் ஸ்பூன்
 4. தேங்காய் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
 5. கஸ்துரி மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
 6. கிரீன் டீ ஃபைன் பவுடர் – 3 டீஸ்பூன்

ஹெர்பல் பேக் செய்முறை / homemade face powder in tamil:

மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒரு பெரிய பவுலில் கலந்து கொள்ளவும். நன்றாக கலந்த பின், கண்ணாடி ஜாரில் இந்த கலவையை சேமித்து வைத்துக் கொள்ளவும். பின்பு தேவைப்படும் பொழுது அவற்றை எடுத்து ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்தில் தேய்த்து, 1 நிமிடம் மசாஜ் செய்து கழுவலாம்.

இதையே ஃபேஸ் பேக்காகவும் போட்டு கொள்ளலாம். 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் 4 முறை பயன்படுத்தினாலே ரிசல்ட் தெரியும்.

ஹெர்பல் ஃபேஸ்பேக் பயன்கள்:

இந்த ஹெர்பல் ஃபேஸ்பேக் (Herbal Face Pack) போட்டால் சருமம் பிரகாஷமாக மாறும், சருமம் முழுவதும் சீரான நிறம் கிடைக்கும், சருமம் பொலிவுடன் காணப்படும், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் நீங்கும்.

இந்த ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடரை தாய்மார்கள், கர்பிணிப்பெண்கள், ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் என்று அனைவரும் இந்த ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர் பயன்படுத்தலாம்.

ரோஸ் ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர் (Homemade Face Wash Powder In Tamil):

தேவையான பொருட்கள்:

 • ஓட்ஸ் – 3/4 கப்
 • உலர்ந்த ரோஜா இதழ்கள் – 3/4 கப்
 • பாதாம் – 8

ஹெர்பல் ஃபேஸ்பேக் (Herbal Face Pack) செய்முறை:

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்சி ஜாரில் சேர்த்து பவுடராக அரைத்து கொள்ளவும்.

பின்பு அவற்றை ஒரு கண்ணாடி ஜாரில் சேமித்து வைத்துக்கொள்ளவும்.

இந்த கலவையை தேவைப்படும் போது எடுத்து தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் பூசி சிறிது நேரம் நன்றாக தேய்த்து, பின்பு குளிர்ந்த நீரில் குளிக்கவும்.

ஹெர்பல் ஃபேஸ்பேக் பயன்கள்:

இந்த ஹெர்பல் ஃபேஸ்பேக் (Herbal Face Pack) போட்டால் வெயிலால் ஏற்படும் சரும பிரச்னைகள் போகும். இயற்கையாகவே சருமம் பளிச்சிடும். சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

இயற்கையான க்ளோ கிடைக்கும். தாய்மார்கள், கர்ப்பிணிகள், பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.

newதலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய் செய்முறை!!! best home remedy..!

ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர் (Homemade Face Wash Powder In Tamil):

தேவையான பொருட்கள்:

 1. அரிசி மாவு – அரை கப்
 2. பச்சை பயறு மாவு (pachai payaru for face in tamil) – அரை கப்
 3. கடலைமாவு – அரை கப்
 4. ஓட்ஸ் பவுடர் – அரை கப்

ஹெர்பல் ஃபேஸ்பேக் செய்முறை:

இந்த 4 பொருட்களை ஒரு பவுலில் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். தேவையான அளவு பவுடரை எடுத்து, தண்ணீருடன் கலந்து முகம், கழுத்து ஆகிய இடங்களில் தேய்த்து கழுவலாம்.

ஹெர்பல் ஃபேஸ்பேக் பயன்கள்:

இந்த ஹெர்பல் ஃபேஸ்பேக் (Herbal Face Pack) சருமத்தில் ஏற்படும் கருத்திட்டுக்களை நீக்கும். பருக்களின் வடு நீங்கும். முகத்தைப் பளிச்சிட வைக்கும்.

சருமம் முழுவதும் ஒரே பளிச் நிறத்தைக் கொடுக்கும். சீரான ஸ்கின் டோன் கிடைக்கும்.

சருமம் மிருதுவாகும். தாய்மார்கள், கர்ப்பிணிகள், பிறந்த குழந்தைகளுக்கு கூட பயன்படுத்தலாம்.

newபுருவம் அடர்த்தியாக வளர டிப்ஸ்..! Eyebrow Growth Tips in Tamil..! Puruvam Valara Tips in Tamil..!
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>இயற்கை அழகு குறிப்புகள்..!