அடர்த்தியான முடியை வெறும் 15 நாட்களில் பெற இந்த எண்ணெய் போதும்..! Homemade Hair Oil for Hair Growth in Tamil..!
நண்பர்களுக்கு வணக்கம்.. முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிவு பிரச்சனை முற்றிலும் சரியாவும் நமது பொதுநலம்.காம் பதிவில் ஒரு அருமையான ஹேர் ஆயில் தயாரிப்பு பற்றி தான் படித்தறிய போகிறோம். இதை கூந்தல் எண்ணெயை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்தி வருவதன் மூலம் ஒரு மாதத்திலேயே தலைமுடி நன்கு வளரும். முடி உதிர்ந்த பகுதியில் புதிய முடிகளை வளர செய்யும். சரி வாங்க இந்த ஹேர் ஆயிலை எப்படி தயார் செய்ய வேண்டும். என்னென்ன பொருட்கள் தேவைப்படும் போன்ற முழுமையான விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- தேங்காய் எண்ணெய் – 250ml
- வெந்தயம் – 2 ஸ்பூன்
- நெல்லிக்காய் – இரண்டு
- செம்பருத்தி இலை – 10
- கருவேப்பிலை – இரண்டு கைப்பிடியளவு
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே இரவில் முகம் வெள்ளையாக மாற்றும் கரித்தூள்கள்..!
செய்முறை:
ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் வெந்தயம் இரண்டு ஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் இரண்டு, செம்பருத்தி இலை 10 மற்றும் கருவேப்பிலை இலை இரண்டு கைப்பிடியளவு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் ஒரு இரும்பு வாணலியை வைத்து 250ml தேங்காய் எண்ணெயை சேர்த்து சூடேற்றவும்.
எண்ணெய் லேசாக சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கரைந்த கலவையை சேர்த்து கிளறிவிடவும்.
குறைந்தது அடுப்பை மிதமான தீயில் வைத்து 15 நிமிடங்கள் எண்ணெய் காய்ச்ச வேண்டும்.
15 நிமிடங்கள் கழித்து அடுப்பை ஆப் செய்து காய்ச்சிய எண்ணெயை நன்றாக ஆற வைக்கவும்.
எண்ணெய் நன்கு ஆறியதும் வடிகட்டி காற்றுப்புகாத பாட்டிலில் ஊற்றி தலை முடிக்கு பயன்படுத்தலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கூந்தல் பராமரிப்பு – தலைமுடி வெடிப்பு போக இதை செய்தால் போதும்..!
பயன்படுத்தும் முறை:
நாம் தயார் செய்த இந்த எண்ணெயை கூந்தல் எண்ணெயாக தினமும் பயன்படுத்தி வரலாம்.
அல்லது இரவில் இந்த எண்ணெயை தலையில் நன்றாக தேய்த்து விட்டு மறுநாள் தலை குளிக்கலாம்.
அல்லது தலை குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக இந்த எண்ணெயை தலையில் நன்றாக அப்ளை செய்துவிட்டு தலை அலசலாம்.
இந்த மூன்று முறையில் எந்த முறை உங்களுக்கு ஏற்றதாக இருக்குமோ அந்த முறையை நீங்கள் பின்பற்றலாம்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |