Hair Oil For Hair Growth Homemade Tamil
பலபேருக்கு முடி கொட்டுகின்ற பிரச்சனை இருக்கும். பொடுகு, அழுக்கு, பேன், சத்து குறைபாடு போன்ற காரணங்களால் முடி கொட்டுகிறது. இதனை தடுக்க பல விதமான பொருட்களை நாம் முடிக்கு பயன்படுத்தி இருப்போம். இருப்பினும் அவையெல்லாம் முடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வாக இருந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இயற்கையான பொருட்களை பயன்படுத்தினால் முடி உதிர்வையை நிரந்தரமாக தடுக்கலாம். எனவே இப்பதிவில் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி முடி உதிர்வை தடுத்து முடியை ஒரே வாரத்தில் நன்கு வளர வைக்கக்கூடிய ஹேர் ஆயில் எப்படி தயார் செய்வது என்பதை பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How to Make Herbal Oil For Hair Growth at Home in Tamil:
Hair Growth Oil Ingredients in Tamil:
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 10
- செம்பருத்தி பூ- 4
- கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன்
வெறும் 2 நிமிடத்தில் நரை முடி கருமையாக மாறும்..! மாதம் ஒரு முறை தேய்த்தால் போதும்..! |
ஹேர் ஆயில் தயாரிக்கும் முறை:
முதலில் வெந்தயத்தை 4 மணிநேரம் ஊறவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது ஒரு மிக்ஸி ஜாரினை எடுத்து கொள்ளுங்கள். இதில் ஊறவைத்த வெந்தயம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், செம்பருத்தி பூ மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பிறகு, அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைத்து அரைத்த கலவையை சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் 1/2 லிட்டர் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.
இதனை 10 அல்லது 12 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடுங்கள். நன்றாக கொதித்ததும் அதில் 10 கருப்பு மிளகை சேர்த்து கொள்ளுங்கள்.
இப்பொழுது அடுப்பில் இருந்து எண்ணெயை இறக்கி நன்றாக ஆறவைய்யுங்கள். பிறகு எண்ணெய் ஆறியதும், இந்த எண்ணெயை ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது சில்வர் பாட்டிலில் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
தலைமுடி முழுவதும் வெள்ளையாக இருந்தாலும் இந்த தேங்காய் எண்ணெய் போதும் உங்கள் முடியை கருமையாக மாற்றுவதற்கு..! |
பயன்படுத்தும் முறை:
இந்த எண்ணெயை நீங்கள் தினமும் முடிக்கு தேய்க்கலாம் அல்லது தலை குளிக்கும் போது பயன்படுத்தலாம்.
இந்த எண்ணெயை, முடியின் வேர்க்கால்களில் நன்றாக படும்படி அப்ளை செய்து 5 நிமிடத்திற்கு மசாஜ் செய்யுங்கள். பிறகு 1/2 மணி நேரம் அப்படியே வைத்து விட்டு எப்போதும் பயன்படுத்தும் ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசி விடுங்கள்.
⇒ இந்த ஹேர் ஆயிலை நீங்கள் பயன்படுத்திய ஒரே வாரத்தில் முடி உதிர்வு முற்றிலும் நீங்கி முடி கருப்பாகவும் நீளமாகவும் வேகமாகவும் வளரும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |