லிப் பாம் வீட்டிலேயே தயார் செய்யலாமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!

Advertisement

லிப் பாம் செய்முறை | How To Make Lip Balm At Home in Tamil

Homemade Lip Balm – பொதுவாக பெண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள பலவகையான பொருட்களை பயன்படுத்துவார்கள். அதாவது கண்களுக்கு, புருவத்திற்கு, கன்னங்களுக்கு, சருமத்திற்கு என்று தனி தனியான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவார்கள். அந்த வகையில் பெரும்பாலான பெண்கள் உதடுகளுக்கு லிப் பாம் (Lip Balm) பயன்படுத்துவார்கள். இந்த லிப் பாம் இயற்கையான முறையில் வீட்டிலேயே தயார் செய்யலாம். இதற்காக கடைகளில் லிப் பாம் வாங்க காசு செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. சரி வாங்க வீட்டிலேயே லிப் பாம் தயார் செய்வது எப்படி  என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. சிவப்பு ரோஜா இதழ்கள் – ஒரு கைப்பிடியளவு
  2. தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன்
  3. சிறிய பிளாஸ்டிக் பாக்ஸ்  – 1

லிப் பாம் செய்வது எப்படி? | Homemade Lip Balm With Coconut Oil in Tamil

ஸ்டேப்: 1

முதலில் ஒரு கையளவு சிவப்பு ரோஜா இதழ்களை பறித்து சுத்தமாக அலசவும். பிறகு அதனை ஒரு சுத்தமான காட்டன் துணியில் போட்டு தண்ணீர் இல்லாமல் துணியால் ஒத்தி அவற்றில் உள்ள தண்ணீரை சுத்தமாக எடுத்துவிடுங்கள்.

ஸ்டேப்: 2

அனைவரது வீட்டிலும் சிறிய உரல் இருக்கும் அதை எடுத்துக்கொள்ளுங்கள், அவற்றில் ரோஜா இதழ்களை சேர்த்து முதலில் நன்றாக மசித்துக்கொள்ளுங்கள். இறுதியாக ஒரு ஸ்பூன் தேங்காய எண்ணெய் ஊற்றி நன்றாக மசித்து அதனை ஒரு பவுலில் மாற்றிக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

இப்பொழுது பவுலில் எடுத்து வைத்துள்ள மசித்த ரோஜா இதழில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 4

இப்பொழுது நாம் Double Boiler Method-ஐ Follow பண்ண போகிறோம். அதற்கு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். பிறகு மேல் படத்தில் காட்டியுள்ளது போல் ரோஜா இதழ் மசித்து வைத்துள்ள பவுலை பாத்திரத்தின் உள்ளே வைத்து 10 நிமிடம் நன்றாக Boil செய்துகொள்ளுங்கள். 10 நிமிடம் கழித்து அந்த பாத்திரத்தில் இருந்து பவுலை எடுத்துவிடவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
உதடு மற்றும் பற்களுக்கான அழகு குறிப்புகள் !!!

ஸ்டேப்: 5

பாயில் செய்த ரோஜா கலவை மற்றொரு பவுலில் வடிகட்டி அவற்றில் உள்ள சாறை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 6

வடிகட்டிய கலவையை ஒரு சிறிய பிளாஸ்டிக் பாக்ஸில் ஊற்றி ஒரு மணி நேரம் பிரிட்ஜ் பிரீசரில் வைத்து குளிரூட்ட வேண்டும்.

ஸ்டேப்: 7

ஒரு மணி நேரம் கழித்து பிரிட்ஜில் இருந்து அவற்றை எடுத்து ஒரு ஸ்பூனை பயன்படுத்தி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். மீண்டும் ஒரு மணி நேரம் பிரிட்ஜ் பிரீசரில் வைத்து குளிரூட்ட வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
சிவப்பான உதடு பெற இதை செய்தால் மட்டும் போதும்

ஸ்டேப்: 8

ஒரு மணி நேரம் கழித்து அந்த பாக்ஸை திறந்து பார்த்தால் லிப் பாம் (Lip Balm) தயராகி இருக்கும். நீங்கள் இதனை உதட்டில் தடவினால் உங்கள் உதடு பிங் நிறத்தில் இருக்கும். இவற்றில் ரோஜா இதழ் மற்றும் தேங்காய் எண்ணெய் மட்டும் தான் பயன்படுத்தி இருப்பதால் உங்களுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இதனை நீங்கள் இதனை பிரிட்ஜில்  ஸ்டோர் செய்து தினமும் பயன்படுத்தலாம்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement