ஒரே நாளில் நரைமுடி கருமையாக இந்த இரண்டு பொருள் போதும்..! Homemade Natural Hair Dye in Tamil..!
இன்றைய காலகட்டத்தில் டீன் ஏஜ் வயதினருக்கும் நரைமுடி பிரச்சனை வந்து விடுகிறது. இந்த பிரச்சனை வருவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. இந்த நரை முடியை மறைய செய்வதற்க்காக பலர் கடைகளில் விற்பனை செய்யும் கெமிக்கல் நிறைந்த ஹேர் டையை தலை முடிக்கு உபயோகப்படுத்துகின்றன. இருந்தாலும் அது நமக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஆக இன்றைய பதிவில் இயற்கையான முறையில் நரைமுடியை கருமையக்கக்கூடிய ஹேர் டை தயாரிப்பு பற்றி பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- மருதாணி பவுடர் – தேவைக்கேற்ப
- அவுரி பவுடர் – தேவைக்கேற்ப
- உப்பு – ஒரு சிட்டிகை
- டீ டிக்காஷன் – தேவையான அளவு
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முடி வால் போல் இருக்கிறதா..? அப்போ காடுபோல வளர்வதற்கு இந்த 2 பொருள் மட்டும் போதும்..!
பயன்படுத்தும் முறை:
முதல் நாள் உங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு மருதாணி பவுடர் ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளவும். அதில் தேவையான அளவு டீ டிக்காஷனை ஊற்றி நன்கு பேஸ்ட்டு போல் கலந்துகொள்ளுங்கள்.
பின் மறுநாள் இந்த கலவையை தலையில் அப்ளை செய்து 1 மணி நேரம் வரை காத்திருக்கவும் பின் தலை அலசி முடியை நன்றாக காயவைக்கவும். ஷாம்பூ பயன்படுத்த வேண்டாம்.
பிறகு ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் அவுரி பவுடரை உங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் அவற்றில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் குழைத்துக் கொள்ளுங்கள், 10 நிமிடம் கழித்து உங்கள் கலவையும் தலையில் நன்றாக அப்ளை செய்து ஒரு மணி நேரம் வரை காத்திருக்கவும். பின் தலைக்கு எந்த வித ஷாம்பூம் பயன்படுத்தாமல் தலையை அலசவும்.
இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை மட்டும் செய்து வந்தால் தலைமுடியில் உள்ள அனைத்து நரை முடியும் கருமையாக மாறிவிடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 நாட்களில் முகம் கண்ணாடி போல பொலிவு பெறவும் மற்றும் கரும்புள்ளிகள் அனைத்தும் மறையவும் இதை ட்ரை பண்ணுங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |