முகத்தில் பருக்கள் வராமல் இருக்க
அனைவருக்கும் முகம் அழகாகவும் வெண்மையாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் நாம் நினைத்தற்கு எதிர்மறையாக தான் முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் என இவை அனைத்தும் வந்து இருக்கும். இவ்வாறு நம்முடைய முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் தோன்றினால் அதை எப்படியாவது மறைய வைக்க வேண்டும் என்று தான் முயற்சிப்போம். அதுமட்டும் இல்லாமல் நிறைய Face பேக், முகத்திற்கான கிரீம் என இதுபோன்றவற்றையினை உபயோகப்படுத்துவோம். ஆனால் முகத்தில் பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற சந்தேகம் ஆனது நம்மில் பெரும்பாலோனோருக்கு இருக்கிறது. அவர்களுக்கு எல்லாம் பயனளிக்கும் வகையில் இன்றைய பதிவில் முகத்தில் பருக்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
பருக்கள் வர காரணம்:
பருக்கள் பெரும்பாலும் முகத்தில் எண்ணெய் பசை உள்ளவர்களுக்கு அதிகமாக வருகிறது. ஏனென்றால் முகத்தில் உள்ள எண்ணெய் பசையில் தூசிகள் மற்றும் மாசுகள் என இவை அனைத்தும் படிந்து விடுவதால் முகத்தில் பருக்கள் வரக்காரணமாகிறது.
மேலும் மன அழுத்தம், தூக்கமின்மை இதுபோன்ற காரணங்களாலும் பருக்கள் வருகிறது.
How to Avoid Pimples on Face Naturally
முகத்தை பராமரிப்பது:
முகம் வெள்ளையாக இருக்கிறது என்று சரியாக கவனிக்காமல் விட்டு விடாதீர்கள். ஏனென்றால் சரியான பராமரிப்பு இல்லை என்றாலும் கூட பருக்கள் வர ஆரம்பித்து விடும். அதனால் ஒரு நாளைக்கு இரண்டு முறை தவறாமல் முகத்திற்கு எந்த சோப்பு ஏற்றதாக இருக்கிறதோ அதனை பயன்படுத்தி முகத்தை சுத்தமாக கழுவி விட வேண்டும்.
அதேபோல் ஒரு நாளைக்கு நிறைய முறையும் முகத்தை சோப்பு போட்டு கழுவக்கூடாது.
முக வறட்சி:
உங்களுடைய முகம் வறட்சி அடையாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதனால் எப்போது ஈரப்பதம் அடைந்த சருமமாக பார்த்து கொள்ள வேண்டும்.
வறட்சியான சருமமும் பருக்கள் வருவதற்கான காரணமாக அமைகிறது. மேலும் ஏதாவது ஒரு இடத்தில் பருக்கள் வந்து இருந்தால் அதனை தொடுவதோ அல்லது வேறு ஏதேனும் செய்வதை தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் ஒரு பருவானது நிறைய பருக்கள் வர வழிவகுக்கிறது.
பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைவதற்கு இதை தடவினால் போதும்.. |
அதிக தண்ணீர் குடிப்பது:
நீங்கள் சரியான அளவில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் முகம் ஈரப்பதம் இல்லாமல் போய்விடும். அதனால் முகம் ஈரப்பதத்தினை பெறுவதற்காக எண்ணெய் பசியினை சுரக்க ஆரம்பித்து விடும்.
முகத்தில் எண்ணெய் பசை மட்டும் வந்தால் போதும் பருக்களும் அதனை தொடர்ந்து வந்து விடும். அதனால் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல் அதிகமாக சூரிய ஒளி படாதவாறு வைத்து கொள்ள வேண்டும்.
மன அழுத்தம்:
முகப்பருக்கள் வருவதை தடுக்க வேண்டும் என்றால் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் அதிக சிந்தனை மற்றும் மன அழுத்தத்தினை குறைத்து கொள்ள வேண்டும். இத்தகய இரண்டும் யாரிடம் அதிகமாக காணப்படுகிறதோ அவர்களுக்கே பருக்கள் வரும்.
எண்ணெய் உணவுகள்:
பருக்கள் வருவதற்கு நாம் சாப்பிடும் ஒரு விதமான காரணமாக அமைகிறது. அதனால் எண்ணெயில் பொறித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பால் பொருட்கள் இவற்றை எல்லாம் சாப்பிவிடுவதை தவிர்த்து கொண்டால் போதும் முகத்தில் பருக்கள் வராமல் இருக்கும்.
ஒரே ஒரு இரவு போதும்..! முகப்பருக்கள் மாயமாய் மறைந்துவிடும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |