How to Change White Hair to Black Hair Naturally in Tamil
இன்றைய கால கட்டத்தில் இளைகர்களுக்கு கூட நரைமுடி பிரச்சனை ஏற்படுகின்றது. இதற்கு காரணம் மரபணு மாற்றம் மட்டுமில்லை உங்களின் உணவு முறை தான் முக்கிய காரணம். துரித உணவுகள், வெள்ளை மாவில் செய்யப்பட்ட உணவுகள், அதிகமாக சர்க்கரை சேர்த்த உணவுகள், குளிர்ச்சியான உணவுகள் போன்ற உணவுகளை சாப்பிட்டால் ஆரோக்கியமான சருமம், கூந்தலை பெற முடியாது. அதனால் உணவில் B12, ஒமேகா 3 உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். தினமும் உணவில் பச்சை காய்கறிகள், மீன், பழங்கள், இறைச்சிகள் போன்ற உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். இந்த பதிவில் இயற்கையான முறையில் வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவது எப்படி என படித்து தெரிந்து கொள்வோம்.
Home Remedies White Hair to Black Hair Naturally:
நெல்லிக்காய் தூள்:
ஒரு இரும்பு கடாய் எடுத்து கொள்ளவும். அதில் 1 கப் நெல்லிக்காய் தூளை சேர்த்து கருப்பாக மாரு வரை சூடுபடுத்தவும். பிறகு 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி 20 நிமிடங்களுக்கு அடுப்பை குறைவான தீயில் வைத்து கொதிக்க விடவும். பிறகு அடுப்பை அணைத்து 24 மணி நேரம் கடாயிலே ஊறட்டும். மறுநாள் காலையில் கடாயில் உள்ளதை வடிக்கட்டி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்கவும். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை அப்ளை தலையில் அப்ளை செய்து தலை குளிக்கவும்.
பாதியில் முடி உடைந்து உதிர்கிறதா..! இதை மட்டும் வாரத்தில் 1 முறை செய்யுங்கள்..!
கருவேப்பிலை:
இரும்பு கடாயில் ஒரு கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் ஒரு கப் கருவேப்பிலையை சேர்த்து கருப்பாக மாறும் வரை கொதிக்க விடவும். பின் ஆறிய பிறகு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்கவும். இந்த பேக்கை வாரத்தில் இரண்டு முறை இரவு முழுவதும் அப்ளை செய்து காலையில் தலை குளித்து விடவும்.
கருவேப்பிலையில் வைட்டமின் பி நிறைந்திருப்பதால் நரைமுடி வருவதை தடுக்கிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் முடி உதிர்தலை தடுக்கிறது.மருதாணி மற்றும் காபி:
ஒரு டம்ளர் கொதிக்கின்ற நீரில் காபி தூள் சேர்த்து கொதிக்க விடவும். ஆறியதும் மருதாணி பொடி சேர்த்து பேஸ்ட்டாக கலந்து 2 மணி நேரம் அப்படியே மூடி வைத்து விடவும். இந்த பேக்கை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 1 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை குளிக்கவும்.
மருதாணி இயற்கை கண்டிஷனராகவும், நரைமுடியை தடுக்கவும் பயன்படுகிறது.
முடி நீளமாகவும், பொசு பொசுனு வளர இந்த 3 பொருள் மட்டும் போதும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |