வீட்டிலேயே மெனிக்யூர் செய்வது எப்படி?

Advertisement

மெனிக்யூர் செய்வது எப்படி? How to do manicure at home..!

மெனிக்யூர் செய்வது எப்படி (manicure at home) – முகத்திற்கு அடுத்தபடியாக நம் உடலில் வெளியில் தெரியும் பாகம் என்றால் அது கைகள் மட்டுமே. நமக்கு வயதாகிக்கொண்டிருக்கிறது என்பதை நம் முகம் மட்டுமல்ல கைகளும் எளிதாய் காட்டிக்கொடுக்கும்.

நமக்கு வயது ஏறஏற தோல்களில் தோன்றும் சுருக்கம் முகத்தில் மட்டுமல்ல கைகளிலும் தெரியத் தொடங்கும்.

மெனிக்யூர் என்பது அழகுபடுத்துவது மட்டுமல்ல.. நமது கைகளை.. கைவிரல்களை.. எல்லாவற்றிற்கும் மேலாக விரல்களில் இருக்கும் நகங்களைச் சுத்தப்படுத்தி நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்களை நீக்கி, விரல்களுக்கும் கைகளுக்கும் புத்துணர்ச்சி கொடுப்பது எனலாம்.

புத்துணர்ச்சி கிடைப்பதன் மூலமாகவே கை மற்றும் விரல்கள் சுருக்கம் நீங்கிய நிலையில் பார்க்க மிகவும் அழகாக மினுமினுப்பாக வெளிப்படுகிறது.

பெண்கள் பெரும்பாலும் தங்கள் முகம், தலைமுடிக்கு அடுத்து அழகுப் படுத்திக்கொள்ள விரும்புவது கைகளைத்தான்.

newமுகத்தை தங்கம் போல் வைத்திருக்கும் ஆவாரம்பூ அழகு குறிப்புகள்..!

சரி இப்போது நம் வீட்டிலேயே மிக எளிமையான முறையில் கைகளை அழகுபடுத்த மெனிக்யூர் செய்வது எப்படி (manicure at home) என்று இப்போது நாம் இந்த பகுதியில் தெளிவாக படித்தறிவோம் வாங்க..!

மெனிக்யூர் செய்வது எப்படி? – (Manicure at home) ஸ்டேப் :1

மெனிக்யூர் செய்வது எப்படி – முதலில் கைவிரல் நகங்களில் நெயில் பாலிஷ் இருந்தால், அதை நல்ல தரமான நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு நீக்கிவிடுங்கள்.

மெனிக்யூர் செய்வது எப்படி? – (Manicure at home) ஸ்டேப் :2

பின்பு தங்களுடைய விருப்பத்துக்கு ஏற்ப நகங்களை சேவ் செய்து வடிவமைத்து கொள்ளவும்.

பிறகு கைவிரல் நகங்களில் உள்ள க்யூட்டிக்கல்ஸில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். இவ்வாறு தினமும் செய்வதினால், கைவிரல் நகங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

மெனிக்யூர் செய்வது எப்படி? – (Manicure at home) ஸ்டேப் :3

பின்பு ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்ளவும், அவற்றில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் தாங்கள் பயன்படுத்தும் ஷாம்பு ஒரு ஸ்பூன் மற்றும் ஒரு கைப்பிடியளவு ரோஜா இதழ்கள் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

பிறகு தங்களுடைய இரண்டு கைகளையும் நனைத்து 10 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும்.

பின்பு கைவிரல் நகங்களை ஒரு டூத் பிரஷை கொண்டு சிறிது நேரம் தேய்த்து சுத்தம் செய்யவும்.

இவ்வாறு செய்வதினால் கைவிரல் நகங்களில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்கி நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

newஅழகு குறிப்புகள் – அழகுக்கு அழகு சேர்க்கும் பால்!!!Azhagu Kurippugal..!

மெனிக்யூர் செய்வது எப்படி? – (Manicure at home) ஸ்டேப் :4

ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்துக்கொள்ளவும், அவற்றில் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு. ஒரு ஸ்பூன் காபி தூள், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால் மற்றும் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இப்பொழுது ஸ்க்ரப் தயார். இந்த கலவையை தங்களுடைய இரண்டு கைகளிலும் நன்றாக தடவி, மசாஜ் செய்யவும், நன்றாக மசாஜ் செய்த பிறகு 5 நிமிடம் வரை காத்திருக்கவும். பின்பு கைகளை சுத்தமாக கழுவி விடவும்.

இந்த ஸ்க்ரப் தங்களது கைகளுடைய அழகை எப்பொழுதும் அழகாகவே வைத்துக்கொள்ள பெரிதும் உதவும்.

மெனிக்யூர் செய்வது எப்படி? – (Manicure at home) ஸ்டேப் :5

அடுத்ததாக கைகளை அழகுபடுத்த சூப்பரான பேக் செய்வது எப்படி(manicure at home in tamil language) என்று இப்போது நாம் பார்ப்போம் வாங்க..!

ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும். அவற்றில், ஒரு கையளவு பன்னீர் ரோஜா இதழ்கள், சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்பு சுத்தமான பவுலில் இந்த அரைத்த கலவையை சேர்த்து, அவற்றில் ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்பு இந்த பேஸ்டை தங்களுடைய இரண்டு கைகள் முழுவதும் நன்றாக அப்ளை செய்து குறைந்தது 10 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்து, பின்பு கைகளை கழுவி விடவும்.

இவ்வாறு செய்வதினால் தங்களுடைய கைகள் மிகவும் மென்மையாகவும், பளபளப்பாகவும், மிகவும் அழகாகவும் காணப்படும். இந்த பேக்கை(manicure at home in tamil language) முகத்திற்கும் கூட பயன்படுத்தலாம்.

இறுதியாக தங்களுக்கு பிடித்த நெயில் பாலிஷை போட்டுக்கொள்ளுங்கள்.

அழகு குறிப்பு (beauty tips in tamil):

இந்த மெனிக்யூர் வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், கைகள் கருமையாவதைத் தடுக்கலாம். மேலும் இச்செயலால் குதிகால் வெடிப்பு வராமலும் இருக்கும் மற்றும் பாதங்களும் மென்மையாக இருக்கும்.

newஉதடு மற்றும் முகத்தில் ஏற்பட்ட கருமையை நீக்க குறிப்புகள் !!!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement