பார்லர் செல்லாமல் வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி?

பெடிக்யூர் செய்வது எப்படி

பார்லர் செல்லாமல் வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி?

அழகு குறிப்பு..!

பாதங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணம், போதிய பாத பராமரிப்புக்களைக் கொடுக்காமல் இருப்பது தான். பலரும் அழகைப் பராமரிக்கிறேன் என்ற பெயரில், தங்களது முகம், கை, கால்களுக்கு மட்டும் பராமரிப்புக்களைக் கொடுத்துவிட்டு, பாதங்களை மறந்துவிடுவார்கள்.

ஆனால் அழகு என்பது வெறும் அப்பகுதிகளில் மட்டுமல்ல, தலை முதல் பாதம் வரை நாம் சுத்தமாக பராமரிப்பதில் தான் உள்ளது.

அதில் பாதங்களை அழகாக வைத்துக் கொள்ள அழகு நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பெடிக்யூர் சிறந்த வழி. இதைச் செய்ய அழகு நிலையங்களுக்குத் தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.

வீட்டிலேயே இவற்றை எளிமையாக செய்யலாம். இங்கு வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.

இதை வாரம் ஒருமுறை பின்பற்றி வந்தாலே போதும், குதிகால் வெடிப்பு வருவதைத் தடுக்கலாம்.

சரி வாங்க பெடிக்யூர் செய்வதற்கு அழகு நிலையத்திற்கு செல்லாமல், வீட்டிலேயே எளிய முறையில் பெடிக்யூர் செய்வது எப்படி என்று இப்போது நாம் தெரிந்து கொள்வோம் வாங்க..!

இதையும் படிக்கவும்–> முகத்தில் உள்ள முடி நீங்க இயற்கை வழிகள் !!!

 

அழகு குறிப்பு..!

பெடிக்யூர் செய்வது எப்படி (Pedicure at home) ஸ்டேப் :1

முதலில் கால்விரல் நகங்களில் நெயில் பாலிஷ் இருந்தால், அதை நல்ல தரமான நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு நீக்கிவிடுங்கள்.

பெடிக்யூர் செய்வது எப்படி (Pedicure at home) ஸ்டேப் :2

பின்பு ஒரு அகன்ற டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 1 டேபிள் ஸ்பூன் ஷாம்பு சேர்த்து கலந்து, பின் அதனுள் கால்களை 5 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு கால்களைத் தேய்த்து வெளியே எடுத்து, துணியால் துடைக்கவும்.

பெடிக்யூர் செய்வது எப்படி (Pedicure at home) ஸ்டேப் :3

அடுத்து அகன்ற டப்பில் வெதுவெதுப்பான நீரை பாதியாக நிரப்பி, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, எலுமிச்சைத் தோலை நீரிலேயே போட்டு, கால்களை நீரில் மீண்டும் 5 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சைத் தோலைக் கொண்டு தேய்க்க வேண்டும்.

பிறகு பியூமிக் கல் பயன்படுத்தி, குதிகால்களை நன்கு தேய்த்து விட்டு, கால்களை வெளியே எடுத்து துணியால் துடைக்க வேண்டும்.

இதையும் படிக்கவும்–> அழகான சருமம் பெற அற்புதமான அழகு குறிப்புகள்!!!

பெடிக்யூர் செய்வது எப்படி (Pedicure at home) ஸ்டேப் :4

ஒரு பௌலில் 2 டீஸ்பூன் காபி பொடி, 2 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் அதனை கால்களில் தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு கையால் கால்களை சிறிது நேரம் தேய்த்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

பெடிக்யூர் செய்வது எப்படி (Pedicure at home) ஸ்டேப் :5

இறுதியில் கெட்டியான ஏதேனும் ஒரு மாய்ஸ்சுரைசரை கால்களில் தடவி, மென்மையாக 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

அழகு குறிப்பு (beauty tips in tamil):

இந்த பெடிக்யூரை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், கால்கள் கருமையாவதைத் தடுக்கலாம். மேலும் இச்செயலால் குதிகால் வெடிப்பு வராமலும் இருக்கும் மற்றும் பாதங்களும் மென்மையாக இருக்கும்.

இதையும் படிக்கவும்–> உதடு மற்றும் பற்களுக்கான அழகு குறிப்புகள் !!!

 

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com