வெயில் காலத்தில் முகம் பளபளப்பாக
இந்த வெயில் காலம் வந்தாலே நமது முகம் பொலிவிழந்து காணப்படும். முகம் பளபளப்பாக இருப்பதற்காக நாமும் காசு கொடுத்து பேசியல் செய்து மேக்கப் போட்டாலும் சிறிது நேரத்திற்கு மட்டும் முகத்தை பொலிவாக வைத்து கொள்ளும். அதன் பிறகு முகம் பொலிவிழந்து காணப்படும். அதனால் இயற்கையான முறையில் முகத்தை எப்படி பளபளப்பாக வைத்து கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
முகத்தை பொலிவாக வைத்து கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ஐஸ்கட்டி:
முதலில் ஐஸ்கட்டி எடுத்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
வெள்ளரிக்காய் ஜூஸ்:
அடுத்து ஒரு வெள்ளரிக்காய் எடுத்து கட் செய்து அரைத்து கொள்ளவும். பின் அரைத்த வெள்ளரிக்காயை வடிகட்டி பயன்படுத்தி வடிக்கட்டி சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். இதனுடன், கற்றாழை ஜெல், கிரீன் டீ, ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ளவும். இதனை முகத்தில் ஸ்ப்ரே செய்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
நாள் முழுவதும் முகம் பளபளப்பாக இருக்க 2 சொட்டு தடவினால் போதும்..
காபி தூள்:
ஒரு கிண்ணத்தில் காபி தூள், தயிர், முல்தானி மெட்டி, தக்காளி சாறு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகம் முழுவதும் தடவி 10 நிமிடம் கழித்து ஒரு காட்டன் துணியால் துடைத்து விடவும்.
தக்காளி சாறு:
ஒரு பவுலில் தக்காளி சாறு, எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் செய்து குளிர் சாதன பெட்டியில் வைக்க வேண்டும். 4 மணி நேரம் கழித்து பார்த்தால் பேக் கட்டியாக மாறியிருக்கும். இதனை முகத்தில் 10 நிமிடத்திற்கு மசாஜ் செய்யவும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |