வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கழுத்தில் உள்ள கருமை நீங்க 3 நாட்களுக்கு இதை தேய்த்து குளித்தால் போதும்..!

Updated On: October 29, 2024 12:02 PM
Follow Us:
Natural Remedies For Black Neck in Tamil
---Advertisement---
Advertisement

Natural Remedies For Black Neck in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கழுத்தில் இருக்கும் கருமையை 3 நாட்களில் எப்படி நீங்க செய்வது என்பதனை இப்பதிவில் பார்க்கலாம். பல பேருக்கு முகம் மட்டும் வெள்ளையாக இருக்கும். கழுத்து பகுதி கருமையாக இருக்கும். ஏன் கழுத்து பகுதி முகத்தை விட கருப்பாக இருக்கிறது என்றால் கழுத்தில் அதிகமாக வியர்க்கும். அதுமட்டுமில்லாமல் உடலில் ஹார்மோன் சம நிலையில் இல்லாமல் இருப்பதினாலும், கெமிக்கல் சோப்பு, ஷாம்பு போன்றவற்றை பயன்படுத்துவதாலும் ஏற்படுகிறது. இதனை நீக்க இயற்கையாகவே பல வழிகள் உள்ளன. அதில் ஒன்றை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். இம்முறையை நீங்கள் பின்பற்றினால் வெறும் 3 நாட்களிலே கழுத்தில் உள்ள கருமை நீங்கி வெண்மையாகிவிடும். ஓகே வாருங்கள் பிரண்ட்ஸ் கழுத்து கருமையை எப்படி 3 நாட்களில் நீக்குவது என்பதனை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

How to Get Rid of Dark Neck Fast at Home in Tamil:

Method -1:

 கழுத்தில் உள்ள கருமை நீங்க

முதலில் ஒரு சுத்தமான கிண்ணத்தினை எடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி கொள்ளுங்கள்.

கிண்ணத்தில், நறுக்கிய எலுமிச்சை பழத்தில் ஒரு துண்டில் உள்ள சாறினை மட்டும் பிழிந்து கொள்ளுங்கள். அதனுடன் 1 ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள்.

இப்போது நறுக்கிய மற்றொரு எலுமிச்சை துண்டினை எடுத்து, தயார் செய்து வைத்துள்ள இந்த எலுமிச்சை சாற்றில் நனைத்து உங்கள் கழுத்தின் கருமை நிறம் உள்ள பகுதிகளில் நன்றாக தேய்த்து விடுங்கள்.

2 அல்லது 3 நிமிடங்கள் நன்றாக தேய்த்த பிறகு 10 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் காட்டன் துணியை நனைத்து கழுத்தை சுத்தம் செய்து விடுங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் கழுத்தில் உள்ள கருமை எல்லாம் காட்டன் துணியில் வந்து விடும்.

கழுத்தில் தொங்கும் சதையை குறைக்க எளிய பயிற்சி..!

Method -2:

 natural tips for dark neck in tamil

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இதனை உங்கள் கழுத்தில் கருமை உள்ள இடங்களில் அப்ளை செய்து 2 நிமிடங்கள் வரை நன்றாக தேய்த்து பிறகு துடைத்து எடுத்தீர்கள் என்றால் கழுத்தில் உள்ள கருமை நிறம் நீங்கி விடும்.

மேற்கூறியுள்ள இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்திய பிறகு, கீழே கொடுக்கப்பட்டுள்ள நெக் பேக்கினை போடவும்.

Pack For Dark Neck in Tamil:

 neck darkness removal home remedy in tamil

ஹெர்பல் நெக் பேக் செய்ய தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு- 2 டீஸ்பூன் 
  • கஸ்தூரி மஞ்சள் தூள்- 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாற – 1/2 ஸ்பூன்
  • தயிர்- 1 1/2 ஸ்பூன்
கடலை மாவு முகத்திற்கு தரும் அழகு ரகசியங்கள்..!

நெக் பேக் தயார் செய்யும் முறை:

 how to get rid of dark neck fast in tamil

முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவினை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் கஸ்தூரி மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் தயிரினை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.

அப்ளை செய்யும் முறை:

இப்போது, தயார் செய்து வைத்துள்ள நெக் பேக்கினை எடுத்து கழுத்தின் எல்லா பகுதிகளிலும் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

இதனை 15 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு தண்ணீரால் கழுத்தை நன்றாக கழுவி துடைத்து விடுங்கள்.

மசாஜ்:

 how to get rid of dark neck fast at home in tamil

நெக் பேக் போட்ட பிறகு, சில துளிகள் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி கழுத்திற்கு நன்றாக மசாஜ் செய்து விடுங்கள்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now