How to Remove Dark Spots on Men’s Face in Tamil | ஆண்கள் முகத்தில் உள்ள கருமை நீங்க
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆண்கள் முகத்தில் உள்ள கருமை நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஆண்கள் அதிகமாக வெளியில் செல்வதால் அவர்களின் முகத்தில் கருமை நிறம் அதிகமாக இருக்கும். எனவே, அப்படி இருக்கும் ஆண்கள் என்னென்ன அழகு குறிப்புகளை பின்பற்ற வேண்டும் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
பொதுவாக ஆண்கள் தங்களின் முக ஆரோக்கியத்தை பற்றி பெரிதாக எடுத்து கொள்ளமாட்டார்கள். இதனால் முகத்தில் கரும்புள்ளிகள், அழுக்குகள், தேமல் மற்றும் அழற்சி போன்றவை ஏற்பட்டு முகத்தின் அழகையே மாற்றிவிடும். எனவே இதனை போக்க இயற்கையாகவே சில வழிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இப்பதிவில் கொடுத்துள்ளோம். எனவே முகம் பொலிவிழந்து கருமையாக இருக்கும் ஆண்கள் அனைவரும் இப்பதிவை முழுவதுமாக படித்து பயனடையுங்கள்.
How to Reduce Dark Spots on Men’s Face in Tamil:
டிப்ஸ் -1
ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். இதில் 2 ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு இதனுடன் பால் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.
இதனை உங்கள் முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை நன்றாக கழுவி விடுங்கள்.
டிப்ஸ் -2
ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் எடுத்து கொள்ளுங்கள். இதனை நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்களின் முகம் மட்டுமில்லாமல் உங்கள் உடல் முழுவதும் பொலிவு பெற பாலுடன் இந்த ஒரு பொருளை கலந்து தடவுங்க போதும்
டிப்ஸ் -3
வெள்ளரிக்காயை அரைத்து அவற்றின் சாற்றினை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். இந்த சாறில் ஒரு காட்டன் துணியை நனைத்து முகத்தில் தடவி கொள்ளுங்கள். இவை சிறிது நேரம் உலர்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.
டிப்ஸ் -4
2 ஸ்பூன் தயிருடன் தக்காளி சாற்றினை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனை கருமையாக உள்ள முகம், கை, கால் போன்ற பகுதிகளில் தடவி கொள்ளுங்கள். பிறகு இதனை 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினை கொண்டு கழுவி விடுங்கள்.
டிப்ஸ் -5
உருளைகிழங்கினை நன்றாக கழுவி துருவி அதிலுள்ள சாற்றினை மட்டும் எடுத்து கொடுங்கள். இந்த சாறினை முகத்தில் கருமை பகுதி உள்ள இடங்களில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள கருமை நிறம் விரைவில் மறைந்து விடும்.
டிப்ஸ் -6
மோரில் 2 டீஸ்பூன் ஓட்ஸை சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கருமையாக உள்ள முகம், கை மற்றும் கால்களில் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> ஆண்களின் தலையில் முடி குறைந்து கொண்டே வருகிறதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |