செலவே செய்யாமல் கண் புருவங்கள் 10 நாட்களில் அடர்த்தியாக வளர வேண்டுமா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

How to Grow Eyebrows Thicker in Tamil

How to Grow Eyebrows Thicker in Tamil

பொதுவாக பெண்களுக்கு தங்களின் கண்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக கண்களுக்கு மேலாக உள்ள புருவங்கள் மிகவும் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைத்து பெண்களுக்கும் இருக்கும். அப்படி உங்களுக்கும் அந்த ஆசை இருக்கின்றதா..? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்களின் புருவங்கள் அடர்த்தியாக வளர உதவும் சில குறிப்புகளை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதிலும் குறிப்பாக உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் எப்படி புருவங்கள் அடர்த்தியாக வளர வைப்பது என்பதை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Eyebrow Growth Tips at Home in Tamil:

Eyebrow Growth Tips at Home in Tamil

உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் எப்படி புருவங்கள் அடர்த்தியாக வளர வைப்பது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். அதற்கு முதலில் தேவையான பொருட்களை பற்றி விரிவாக காணலாம்.

  1. பூண்டு – 10 பற்கள் 
  2. தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன் 
  3. விளக்கெண்ணெய் – 1/2 டீஸ்பூன் 
  4. கற்றாழை ஜெல் – 1/2 டீஸ்பூன் 

பூண்டு எடுத்து கொள்ளவும்:

முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 10 பற்கள் பூண்டுகளின் தோல்களை நீக்கி விட்டு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நனகு அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதில் இருக்கும் சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் வடிக்கட்டி கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> Beauty Parlour -க்கு செல்லாமலே புருவங்களை இப்படி அழுகுபடுத்துங்கள்

தேங்காய் எண்ணெயை சேர்க்கவும்:

நாம் வடிக்கட்டி வைத்துள்ள சாற்றுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

விளக்கெண்ணெயை சேர்க்கவும்:

பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1/2 டீஸ்பூன் விளக்கெண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

கற்றாழை ஜெல்லினை சேர்க்கவும்:

அடுத்து அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1/2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு இதனை உங்களின் புருவத்தின் மீது தடவி 10 – 15 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

இதனை 10 நாட்களுக்கு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர்வதை நீங்களே காணலாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=> 3 நாட்களில் உங்கள் புருவங்கள் அடர்த்தியாக வளர இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க..!

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil