கண் இமை முடி வளர..! | How to Grow Eyelashes Naturally at Home in Tamil
பொதுவாக பெண்களுக்கு அழகை தருவது கண்கள் தான். அந்த கண்களின் அழகை மேலும் அழகுபடுத்தி காட்டுவது கண் இமையில் உள்ள முடிகள் தான். ஆனால் பல பேருக்கு அந்த இமை முடி சின்னதாக இருக்கும். ஆகாயல் இமை முடிகளை இயற்கையாகவே வளர வைக்கலாம். அது எப்படி என்று தானே கேட்குறீர்கள்..? அதற்காகத்தான் இப்பதிவு. இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி கண் இமையில் உள்ள முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வைப்பது என்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
1. தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் பொதுவாக முடி வளர்ச்சிற்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த தேங்காய் எண்ணெயை எல்லோரும் தலை முடிக்கு மட்டும்தான் பயன்படுத்துவார்கள். ஆனால் தேங்காய் எண்ணெயை கண்ணின் இமை முடி வளர்வதற்கும் பயன்படுத்தலாம். இது முடியின் உள்ள புரதங்களின் இழப்பை தடுத்து முடியை நன்றாக வளர செய்கிறது.
கண்களுக்கு பயன்படுத்தும் முறை:
இந்த எண்ணெயை பயன்படுத்துவதற்கு முன்பு, முதலில் உங்கள் கண்ணை தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு பிறகு ஒரு காட்டன் துணியை எடுத்து தேங்காய் எண்ணெயில் தொட்டு கண்ணின் மேல் மற்றும் கீழ் இமைகளில் தடவ வேண்டும்.
இப்படி செய்யும் போது எண்ணெய் கண்ணுக்குள் போகாமல் பாதுக்காப்பாக தடவ வேண்டும். இதை நீங்கள் இரவில் தூங்க செல்வதற்கு முன்பாக செய்து விட்டு காலையில் துடைத்து விட வேண்டும்.
2. ஆமணக்கு எண்ணெய்:
ஆமணக்கு எண்ணெயில் உள்ள ரிசினோலிக் அமிலம், முடியின் அடர்த்திக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை முறை கண்கள் சிமிட்டுகிறான் தெரியுமா..?
கண்களுக்கு பயன்படுத்தும் முறை:
ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்துவதற்கு முன் உங்கள் கண்களை தண்ணீரால் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பிறகு கண் உலர்ந்ததும் காட்டன் துணியால் ஆமணக்கு எண்ணெயை தொட்டு கண்ணிற்குள் எண்ணெய் படாதவாறு கண்ணின் மேல் மற்றும் கீழ் இமைகளில் தடவ வேண்டும்.
சில பேருக்கு ஆமணக்கு எண்ணெய் அழற்சியினை ஏற்படுத்தும். எனவே நீங்கள் இதை பயன்படுத்தும் போது தோல் மருத்துவரிடம் கேட்டு கொள்ளுங்கள்.
இந்த எண்ணெயை இரவில் தூங்க செல்வதற்கு முன்பாக தடவி காலையில் துடைத்து விட வேண்டும்.
3. க்ரீன் டீ:
க்ரீன் டீயில் எபிகல்லோகேடசின்-3-கேலேட் (EGCG) என்னும் பாலி ஃபீனால் உள்ளது. அதனால் இது கண் இமை முடியின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
உங்கள் கண்களின் நல்லதுக்கு இதனை கட்டாயம் செய்ய வேண்டும்!!!
பயன்படுத்தும் முறை:
நீங்கள், க்ரீன் டீ இலைகளை 1 டீஸ்பூன் எடுத்து கொள்ளவும் (அல்லது 1க்ரீன் டீ பேக்). அதனுடன் 1 டம்ளர் தண்ணீரை சேர்த்து அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதை வடிகட்டி குடிக்கவும். ஒரு நாளைக்கு இரு முறை குடிக்க வேண்டும்.
இந்த தேநீரை குளிர்வித்து, ஒரு பருத்தி துணியால் நனைத்து கண் இமையின் மேல் மற்றும் கீழ் புறத்தில் தடவ வேண்டும். இதை நீங்கள் தினமும் ஒரு முறை செய்ய வேண்டும்.
4. இமைகளுக்கு மசாஜ்:
நீங்கள் கூந்தலுக்கும் உடலுக்கும் மசாஜ் செய்வது போன்றே கண் இமைகளுக்கும் மசாஜ் செய்யலாம். கண் இமைகளுக்கு மசாஜ் செய்வதால் கண் இமைகளில் இரத்த ஓட்டம் அதிகாரிக்கும்.
மசாஜ் செய்யும் முறை:
உங்கள் கைகளை சுத்தமாக கழுவி துடைத்து விட்டு, ஆலிவ் எண்ணெயை கை விரல்களில் நனைத்து, கண்ணை மூடிக்கொண்டு வட்ட ஷேப்பில் மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யும் பொது கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இதை நீங்கள் 5 லிருந்து 10 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
இதேபோல் நீங்கள் காலை எழுந்ததும் அல்லது இரவு தூங்க செல்வதற்கு முன்பாக செய்து வரவும். நீங்கள் தொடர்ந்து செய்தால் கண் இமைகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளரும்.
5. Vaseline:
இந்த வாசலின் உங்கள் இமைகளுக்கு ஈரப்பதத்தை அளித்து இமை முடிகள் சேதமடையாமல் பாதுகாக்குகிறது.
கண்களுக்கு பயன்படுத்தும் முறை:
ஒரு காட்டன் துணியில் வாசலினை தொட்டு கண்ணிற்குள் படாமல் கண்ணின் மேல் மற்றும் கீழ் இமைகளில் தடவ வேண்டும். இதை நீங்கள் இரவில் தூங்க செல்வதற்கு முன்பாக செய்து காலையில் துடைத்து விட வேண்டும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |