How to grow Hair Faster and Thicker Naturally at Home in Tamil
பொதுவாக அனைவருக்குமே தங்களின் தலை முடியின் மீது அதிக கவனமும் மற்றும் அதனை நன்கு நீளமாக வளர்க்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதற்காக நாமும் பல வகையில் முயற்சிப்போம். ஆனால் இன்றைய கால கட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றால் தலை முடியை நன்கு நீளமாக வளர்க்க வேண்டும் என்ற உங்களின் அனைத்து முயற்சிகளும் வீணாகி போகின்றதா..? கவலை வேண்டாம் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் எப்படி உங்களின் தலை முடியை நன்கு நீளமாக வளர்க்கலாம் என்பதற்கான ஒரு குறிப்பினை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
Home Remedies for Hair Growth and Thickness in Tamil:
இயற்கையான முறையில் எப்படி உங்களின் தலைமுடியை நன்கு நீளமாக வளர்க்கலாம் என்பதற்கான ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்
- நல்லெண்ணெய் – 50 மி.லி
- விளக்கெண்ணெய் – 40 மி.லி
- வேப்ப எண்ணெய் – 50 மி.லி
- கடுகு எண்ணெய் – 40 மி.லி
- கருவேப்பிலை – 2 கைப்பிடி அளவு
- மிளகு – 1 டீஸ்பூன்
- கரிசலாங்கண்ணி இலை – 1 கைப்பிடி அளவு
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்களின் முகம் எப்பொழுதும் நன்கு பொலிவுடன் பளபளப்பாக இருக்க வேண்டுமா ஆரஞ்சு தோல் மட்டும் போதும்
கடாயை எடுத்து கொள்ளவும்:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 லிட்டர் தேங்காய் எண்ணெய், 50 மி.லி நல்லெண்ணெய், 40 மி.லி விளக்கெண்ணெய், 50 மி.லி வேப்ப எண்ணெய் மற்றும் 40 மி.லி கடுகு எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
கருவேப்பிலையை சேர்க்கவும்:
இதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு கருவேப்பிலையை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
மிளகினை சேர்த்து கொள்ளவும்:
பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் மிளகினை உரலில் போட்டு ஒன்றும் பாதியுமாக இடித்து சேர்த்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> தலை சீவும் போது சீப்பு முழுவதும் முடியாக உள்ளதா அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க சீப்பில் ஒரு முடிகூட வராது
கரிசலாங்கண்ணி இலையை சேர்க்கவும்:
இறுதியாக இதனுடன் கரிசலாங்கண்ணி இலையை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பின்னர் இதனை நன்கு சூடு ஆற விட்டு ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் வடிகட்டி ஊற்றி கொள்ளுங்கள்.
இதனை வாரம் இரு முறை அல்லது மூன்று முறை தலையில் தடவி தலைக்கு குளியுங்கள். இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் தலை முடி நன்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்வதை நீங்களே காணலாம்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> முகத்தில் உள்ள பள்ளங்களை மறைய வைக்க பாலுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |