How to Heal Cracked Feet Overnight in Tamil
நாம் நினைத்த இடங்களுக்கெல்லாம் நாம் நடந்து செல்ல வேண்டும் என்றால் நமக்கு உதவுவது நமது பாதங்கள் தான். அப்படி நமக்கு மிகவும் உதவும் பாதங்களை நாம் மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக ஒரு சிலருக்கு பாதத்தில் வெடிப்புகள் இருக்கும் அதனை போக்கவில்லை என்றால் அந்த வெடிப்புகளின் வழியாக கிருமிகள் நமது உடலுக்குள் சென்று பல தீமைகளை நமக்கு விளைவிக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் உங்களின் பாதத்தில் உள்ள வெடிப்புகளை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் பாதத்தில் உள்ள வெடிப்புகளை போக்கி கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How to Heal Cracked Feet Overnight Home Remedies in Tamil:
உங்களின் பாதத்தில் உள்ள வெடிப்புகளை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். அதற்கு முதலில் தேவையான பொருட்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
- மெழுகுவர்த்தி – 1
- வாசலின் – 1 டேபிள் ஸ்பூன்
- கற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன்
- பாதாம் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
மெழுகுவர்த்தியை உருக்கி கொள்ளவும்:
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 மெழுகுவர்த்தியை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து நன்கு உருக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றி கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 2 நாட்கள் இதை தடவினால் போதும் உங்க பாதங்களில் இருக்கும் வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்
வாசிலினை கலந்து கொள்ளவும்:
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் வாசிலினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
கற்றாழை ஜெல்லினை கலந்து கொள்ளவும்:
இப்பொழுது அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பாதாம் எண்ணெயை சேர்த்து கொள்ளவும்:
இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெயை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து உங்களின் பாதங்களில் தடவி 10 -15 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் உங்களின் பாதங்களை கழுவி கொள்ளுங்கள்.
இதனை செய்வதன் மூலம் உங்களின் பாதத்தில் உள்ள வெடிப்புகள் ஒரே நாள் இரவில் மறைய ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 2 நாட்களில் உங்கள் பாதங்களில் இருக்கும் வெடிப்புகளை மறைய வைப்பதற்கு இந்த டிப்ஸ் மட்டும் போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |