பீட்ரூட் லிப் பாம் செய்முறை – How to Make Beetroot Lip Balm in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் உதடு கருமையை போக்கும் அருமையான ஹோம் மேடு லிப் பாம் தயார் செய்யும் முறையை பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக பெண்கள் மற்றும் ஆண்கள் பலருக்கு உதடு கருமையாக இருக்கும். இந்த கருமையை போக்குவதற்காக பல கடைகளில் விற்பனை செய்யப்படும் லிப் பாம்-ஐ வாங்கி பயன்படுத்துவார்கள். இருப்பினும் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் உங்கள் உதடுகளில் உள்ள கருமையை நீங்க வேண்டுமா? உதடுகளுக்கு இயற்கையான பிங்க் நிறத்தை தரும் இந்த ஹோம் மேடு லிப் பாமை உங்கள் உதடுகளில் ட்ரை செய்வதன் மூலம், உதட்டில் இருக்கும் கருமையை எளிதில் அகற்றிவிடலாம். சரி வாங்க அந்த லிப் பாம் எப்படி தயார் செய்ய வேண்டும் ஏற்று இப்பொழுது பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
பீட்ரூட் லிப் பாம்:
பீட்ரூட் உதடுகளில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உதடுகளை நீரேற்றமாகவும், ஊட்டமாகவும் வைத்திருக்க உதவுகின்றன. பீட்ரூட் லிப் பாமின் செயமுறையை இப்பொழுது பார்க்கலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்க முகம் நிலவை போல் நன்கு பொலிவுடன் காட்சியளிக்க வேண்டுமா..? அப்போ தயிருடன் இந்த பொருட்களை கலந்து தடவுங்கள் போதும்..!
தேவையான பொருட்கள்:
- பீட்ரூட் சாறு – 2 டேபிள்ஸ்பூன்
- ஷியா பட்டர் – டேபிள் ஸ்பூன்
- வைட்டமின் E கேப்ஸ்யூல் – 1
- தேனீ மெழுகு – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை – How to Make Beetroot Lip Balm in Tamil:
Step: 1
முதலில் பீட்ரூட்டை துருவி சாறு எடுத்துக் கொள்ளவும்.
Step: 2
ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதன் மீது மற்றொரு கிண்ணத்தை வைத்து ஷியா பட்டர் மற்றும் தேனீ மெழுகை உருக்கவும்.
Step: 3
உருக்கிய கலவையுடன் 2 டேபிள்ஸ்பூன் பீட்ரூட் சாறு, சேர்த்து மிக்ஸ் செய்யவும், பின் இதனுடன் ஒரு வைட்டமின் E கேப்ஸ்யூலில் உள்ள ஜெல்லை பிழிந்து ஊற்றவும்.
Step: 4
இதனை ஒரு சிறிய லிப் பாம் பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைக்கலாம். அரை மணி நேரத்தில் நன்கு செட்டாகிவிடும். உங்கள் உதடுகளில் கருமையை போக்க இந்த இயற்கையான பீட்ரூட் லிப் பாமை பயன்படுத்துங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த வெயில் காலத்திலும் உங்க முகம் பொலிவுடன் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |