How To Make Herbal Shampoo At Home In Tamil
பெண்கள் முடி வளர்ச்சி அடைய பல்வேறு ரசாயனங்கள் கலந்த ஷாம்புவை பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்கள் முடி வளர்ச்சி அடைந்தாலும் அதில் சில பக்க விளைவுகளும் இருக்கின்றன. பெண்கள் தங்கள் முடி வளர்ச்சி மற்றும் முடி வலுவாக இருக்க வீட்டிலேயே சில ஷாம்புக்களை தயாரிக்கலாம். இது அவர்களுக்கு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் முடி வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
பொதுவாகவே பெண்கள் தங்கள் முடியின் மேல் பெரிதும் அக்கறை காட்டுவார்கள். முடி கொட்டினால் அதற்கு சில மருந்துகளையும் பயன்படுத்துகிறார்கள். முடி வளர்ச்சி அடைய மருந்துகள் பயன்படுத்தாமல் இயற்கையாக வீட்டில் ஹர்பல் ஷாம்பு தயாரித்து பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும். ரசாயனங்கள் எதுவும் கலக்காமல் வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
வருங்காலத்தில் இந்த தொழிலுக்கு Demand எப்போதுமே இருக்கும்..!
ஹெர்பல் ஷாம்பு தயாரிக்க தேவையான பொருட்கள்:
- சிகைக்காய் 100 கிராம்
- பூந்திக்கொட்டை -100 கிராம்
- நெல்லிக்காய் – 100 கிராம்
- வெந்தயம் – 50 கிராம்
- வேப்பிலை அல்லது துளசி – 25 கிராம் பொடி
சிகைக்காய் தரமானதாக இருக்க வேண்டும். பூந்திக்கொட்டை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். காய்ந்த நெல்லிக்காய் வீட்டில் அல்லது கடைகளில் வாங்கிக்கொள்ள வேண்டும். வேப்பிலை அல்லது துளசி இலைகளை மட்டும் எடுத்து காயவைத்து பொடியாக்கிக்கொள்ளவும்.
ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி?
- சிகைக்காய், பூந்திக்கொட்டையை மற்றும் நெல்லிக்காயை உரலில் இட்டு இடித்து பொடியாக்கிக்கொள்ளவும்.
- அதன் பிறகு மூன்றையும் மிக்ஸியில் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- அரைத்த இந்த கலவையை கண்ணாடி பாட்டிலில் கொட்டி வைக்கவும். ஷாம்பு தயாரிக்கும் போது தேவையான பொடியை சேர்த்துகொள்ளலாம். இவை ஆறுமாதங்கள் வரை அப்படியே இருக்கும்.
- வெந்தயத்தை வறுத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பிறகு இதனோடு துளசி வேப்பிலை பொடியை கலந்து இதை தனியாக கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கவும்.
- ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பதற்கு இரும்பு வாணலி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- இரும்பு வாணலியில் இரண்டு கப் நீர் விட்டு அதில் இரண்டு டீஸ்பூன் அளவு சிகைக்காய் பூந்திபொடி, வெந்தய துளசி பொடியை சேர்த்து விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறி விடவும்.
- பிறகு அடுப்பை அணைத்து அப்படியே இரும்பு வாணலியில் மூடி விடவும். ஷாம்பு அதிக அடர்த்தியாக தேவையெனில் மேலும் சிறிது நேரம் அடுப்பில் வைத்திருக்கலாம்.
- 8 முதல் 10 மணி நேரம் கழித்து அந்த திரவத்தை கையால் மசித்து கரைத்து அதை வெள்ளைத்துணியில் வடிகட்டி கொள்ளவும். கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.
- ஹெர்பல் ஷாம்பு தயாரிக்க தேவையான பொடியை மொத்தமாக செய்து வைத்துகொள்ளலாம். ஷாம்புவை மட்டும் அவ்வபோது தயாரித்து பயன்படுத்த வேண்டும். ஒருவாரம் வரை வைத்திருக்கலாம்.
ஹெர்பல் ஷாம்பு பயன்படுத்தும் முறை:
- ஹெர்பல் ஷாம்புவை கைகளில் ஊற்றி தலையின் ஸ்கால்ப் (Scalp) பகுதியில் நன்றாக தேய்க்க வேண்டும். குறைந்தது 2 முதல் 3 நிமிடங்கள் வரையாவது தேய்த்தால் தான் எண்ணெய் பிசுக்கு நீங்கும். எண்ணெய் குளியலின் போதும் தலை முழுக்க ஷாம்புவை ஊற்றி தேய்க்க வேண்டும்.
- இதில் இதுக்கும் பூந்திக்கொட்டை மட்டுமே நுரை வரும் என்பதால் மற்ற ஷாம்புகல் போன்று இதில் அவ்வளவாக நுரை வராது.
ஹெர்பல் ஷாம்பு பலன்கள்:
- சிகைக்காய் மற்றும் பூந்திப்பொடி தலையில் உள்ள அழுக்குகளையும் பொடுகுகளையும் நீக்குகிறது.
- நெல்லிக்காய் கூந்தலின் வளர்ச்சிக்கு உதவும்.
- வெந்தயம் குளிர்ச்சியானது மற்றும் கூந்தலை வலுவடைய செய்யும்.
- எனவே இந்த ஹெர்பல் ஷாம்புவை பயன்படுத்தினால் உங்களுக்கு இருக்கும் பொடுகு தோலை நீங்கும். மேலும் முடி அடர்த்தியாகவும் மற்றும் வலுவாகவும் இருக்கும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |