பாதாம் கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி
வணக்கம் நண்பர்களே..! இன்றைய அழகு குறிப்பு பதிவில் நாம் பார்க்க இருப்பது நாம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல் தான். அது என்னவென்றால் நமது முகம் பொலிவு பெறுவதற்கு உதவும் பாதாம் கிரீம் தயாரிப்பது எப்படி..? என்பதை பற்றி தான். நம்மில் பலரும் நமது முகம் நன்கு பொலிவு பெற வேண்டும் என்பதற்காக அதற்கு உதவும் பாதாம் கிரீமை கடையில் சென்று அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவீர்கள். அப்படி பயன்படுத்துபவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் வீட்டிலேயே பாதாம் கிரீம் தயாரிப்பது எப்படி தயாரிப்பது பற்றி விரிவாக காணலாம். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.
வீட்டிலேயே பாதாம் கிரீம் தயாரிக்கும் முறை:
முதலில் பாதாம் கிரீம் தயாரிக்க தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- பாதாம் பருப்பு – 20
- ரோஸ் வாட்டர் – 2 டேபிள் ஸ்பூன்
- பாதாம் எண்ணெய் – 2 டீஸ்பூன்
- வைட்டமின் E கேப்சூல் – 3
- கற்றாழை ஜெல் – 3 டீஸ்பூன்
செய்முறை :
ஸ்டேப் – 1
முதலில் 20 பாதாம் பருப்பை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் நாம் ஊற வைத்திருந்த பாதாம் பருப்பின் தோலை நீக்கி விட்டு அதனுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஸ்டேப் – 2
பிறகு அரைத்த அந்த பேஸ்ட்டை ஒரு கிண்ணத்தில் நன்கு வடிகட்டிக் வைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் 2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஸ்டேப் – 3
பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் 3 வைட்டமின் ஈ கேப்சூல் மாத்திரைகளை நறுக்கி அதில் உள்ள சாற்றை மட்டும் சேர்த்து கலந்து ஒரு காற்றுப்புகாத மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இந்த கிரீம் உங்களுக்கு 1 மாத காலம் வரை வரும்.
வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |