இந்த இயற்கை ஹேர் டை பயன்படுத்துங்க எல்லா வெள்ளை முடியும் கருப்பாகிவிடும் 100%

Advertisement

How to Make Natural Hair Dye in Tamil

பொதுவாக பல நரைமுடியை கருமையாக்க ஒவ்வொரு விதமான முறைகளை முயற்சி செய்திருப்பார்கள், இருப்பினும் அனைவருக்குமே அனைத்து முறைகளும் பயனளிக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சிலருக்கு பயனளித்திருக்கும், ஒரு சிலருக்கு பயனளித்திருக்காது. இருப்பினும் இங்கு கூறப்பட்டுள்ள முறை அனைவருக்குமே பயனளிக்கும் என்று சொல்லலாம். ஆம் நண்பர்களே நரைமுடியை கருமையாக்க நமக்கு எளிதில் கிடைக்கும் மூன்று பொருட்களை கொண்டு ஒரு இயற்கை ஹேர் டை தயார் செய்யும் முறையை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். சரி வாங்க அது என்ன ஹேர் டை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பது குறித்து இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. மருதாணி பவுடர் – இரண்டு டேபிள் ஸ்பூன்
  2. அவுரி பொடி – ஐந்து டேபிள் ஸ்பூன்
  3. வெதுவெதுப்பான நீர் – ஒரு டம்ளர்

ஹேர் டை செய்முறை – How to Make Natural Hair Dye in Tamil:ஹேர் டை

இந்த ஹேர் டையை தயார் செய்ய நீங்கள் கிளாஸ் பவுலை மாட்டும் தான் பயன்படுத்த வேண்டும் வேறு எந்த பாத்திரத்திலும் ஹேர் டையை மிக்ஸ் செய்ய கூடாது ஆக ஒரு கண்ணாடி பவுலை எடுத்துக்கொள்ளுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
30 நிமிடத்தில் உங்கள் தலையில் உள்ள அனைத்து நரைமுடியும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

அந்த கிளாஸ் பவுலில் ஐந்து டேபிள் ஸ்பூன் அவுரி பவுடர் மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் மருதாணி பவுடர் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள்.

பின் அதனுடன் வெதுவெதுப்பான நீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள். இந்த கலவையானது கெட்டியானதாகவும் இருக்கக்கூடாது அதேபோல் தண்ணியாகவும் இருக்க கூடாது இடைப்பட்ட பக்குவத்தில் கலந்துகொள்ளுங்கள்.

பிறகு ஒரு கேரிபேக்கை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் இந்த கிளாஸ் பவுலை உள்ளவைத்து காற்றுப்புகாத அளவிற்கு கட்டிக்கொள்ளுங்கள்.

பிறகு 15 நிமிடங்கள் காத்திருக்கவும், 15 நிமிடம் கழித்து பார்த்தால் ஹேர் டையானது தலை முழுவதும் நன்றாக அப்ளை செய்து ½ மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை காத்திருக்கவும். பின் தலைக்கு மையிலேடு ஷாம்பு பயன்படுத்து தேய்த்து குளிக்கவும்.

இந்த முறையை வாரத்தில் ஒருமுறை செய்யலாம். இந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்திய பிறகு மூன்று நாட்கள் கழித்து தான் தலைக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நரைமுடி, செம்பட்டை முடி நிரந்தரமாக கருமையாக மாறுவதற்கு இந்த தேங்காய் எண்ணெய் மட்டும் போதும்..!

குறிப்பு:

இந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்தும் போது கைகளில் கிளவுஸ் போட்டுக்கொள்ளுங்கள். இல்லையென்றால் கைகள் கருமையாகிவிடும் ஆக கைகளுக்கு கிளவுஸ் உபயோப்படுத்துங்கள்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement