மின்னல் வேகத்தில் உங்கள் தலைமுடி வளர – வெந்தய ஷாம்பூ !!!

Advertisement

வெந்தயம் ஷாம்பூ செய்முறை (natural shampoo)..!

தலை முடி வேகமாக வளர வெந்தயம் ஷாம்பூ (Natural Shampoo) ஒன்றே போதும். இந்த வெந்தயம் இயற்கையாகவே குளிர்ச்சி தன்மையுடையது. மேலும் இந்த வெந்தயத்தை நாம் தலைக்கு ஷாம்பூவாக பயன்படுத்தும்போது. தலை முடி உதிர்தல் பிரச்சனையை தடுத்து, தலை முடி பல மடங்கு வளர்ச்சி தூண்டும். மேலும் பொடுகு பிரச்சனை அடியோடு ஒழியும். வெந்தயம் குளிர்ச்சி தன்மை உடையது என்பதால், சிலருக்கு உடல் சூட்டினால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும். அவர்கள் கூட இந்த வெந்தய ஷாம்பூவை பயன்படுத்தினால், உடல் சூடு தணியும் அதேபோல் முடி உதிர்வு பிரச்னையும் சரியாகும்.

சரி வாங்க இந்த வெந்தயம் ஷாம்பூ (natural shampoo) எப்படி தயார் செய்யலாம் என்று இப்போது நாம் தெளிவாக படித்தறிவோம் வாங்க.

newகடலை மாவு முகத்திற்கு தரும் அழகு ரகசியங்கள்..!

vendhaya shampoo – தேவையான பொருட்கள்:

  1. வெந்தயம் – ஒரு சிறிய கப்
  2. கற்றாழை ஜெல் – ஒரு சிறிய கப்
  3. Liquid Castile Soap அல்லது Baby Shampoo – ஒரு சிறிய கப்
  4. Tea Tree Essential Oil 2 அல்லது 3 துளிகள்.

வெந்தயம் ஷாம்பூ செய்முறை (Natural Shampoo):

ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு சிறிய கப் அளவு வெந்தயம் எடுத்து கொள்ளுங்கள், இந்த வெந்தியத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி  பின்பு அவற்றை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைத்து கொள்ளுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு அவற்றை வடிகட்டி வைத்து கொள்ளுங்கள்.

பின்பு மற்றொரு பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் 1/4 கப் கொதிக்க வைத்த வெந்தயம் நீர், 1/4 கப் கற்றாழை ஜெல், 1/4- liquid castile soap அல்லது baby shampoo 1/4 கப் மற்றும் இரண்டு அல்லது மூன்று துளிகள் tea tree essential oil சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை தலை குளிப்பதற்கு முன் தலையில் தேய்த்து சிறிது நேரம் நன்றாக மசாஜ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு தலை தேய்த்து குளிக்கவும்.

இந்த வெந்தய ஷாம்பூ-வை வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தி வர, தலைமுடி மின்னல் வேகத்தில் வளரும், பொடுகு தொல்லை நீங்கும், அதேபோல் பேன் தொல்லை இருந்தால் உடனே இந்த வெந்தயம் ஷாம்பூ (natural shampoo) பயன்படுத்த பேன் அனைத்தும் நீங்கிவிடும். அதேபோல் பேன் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.

newஉங்கள் முகம் பளபளக்க டிப்ஸ்..!
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement