உதடுகள் அழகாக
பொதுவாக நாம் எப்போதும் நமது முகம் மற்றும் தலை முடிக்கு தான் நிறைய கிரீம், ஹேர் பேக் இதுபோன்றவற்றை ட்ரை செய்து கொண்டிருப்போம். ஆனால் உதடு என்று பார்த்தால் நாம் எதையும் அதிகமாக ட்ரை செய்வது இல்லை. சில நேரத்தில் வெளியில் செல்லும் போது உதடு சிவப்பாகவும் மற்றும் அழகாகவும் இருக்க வேண்டும் என்பதால் லிப்ஸ்டிக் மட்டும் உதட்டிற்கு போடுவது வழக்கமாக இருக்கும். அதனால் உங்களுடைய உதட்டை அழகாகவும் மற்றும் சிவப்பாகவும் வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம் வாங்க..!
How to Make Your Lips Red Naturally Permanently:
உங்களுடைய உதடுகளை உங்களுக்கு பிடித்த மாதிரி அழகாகவும் மற்றும் சிவப்பாகவும் மாற்றுவதற்கு முதலில் இயற்கையான முறையில் ஒரு Lip Bam தயார் செய்ய வேண்டும்.
தேவையான பொருட்கள்:
- ரோஜா- 3
- தேங்காய் எண்ணெய்- 2 தேக்கரண்டி
- Vaseline- 2 தேக்கரண்டி
இதையும் படியுங்கள்⇒ முகத்தில் உள்ள குழிகளை மறைக்க ஐஸ் கட்டி, கற்றாழை முதல் இன்னும் சில குறிப்புகள்
உதடு சிவப்பாக குறிப்புகள்:
ரோஜாவில் இருந்து இதழை எடுத்தல்:
ரோஜா முகத்திற்கு மட்டும் இல்லாமல் உதடுகளுக்கும் நல்ல தீர்வினை கொடுக்கும் ஒரு பூவாக இருக்கிறது. அதனால் 3 ரோஜா பூக்களை எடுத்துக்கொண்டு அதில் இருக்கும் ரோஜா இதழ்களை தனியாக பிரித்து வைத்து கொள்ளுங்கள்.
ரோஜா இதழ்களை வைத்து பேஸ்ட் தயாரித்தல்:
இப்போது எடுத்துவைத்துள்ள ரோஜா இதழை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைத்து கிண்ணத்தில் வைத்து விடுங்கள்.
கிண்ணத்தில் வாசலின் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்தல்:
அதன் பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 தேக்கரண்டி வாசலின் மற்றும் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக 10 நிமிடம் கொதிக்க வைத்து கொள்ளுங்கள்.
ரோஜா இதழை சேர்த்தல்:
10 நிமிடம் கழித்த பிறகு அடுப்பில் இருக்கும் பொருட்களுடன் தயார் செய்து வைத்துள்ள ரோஜா இதழை சேர்த்து நன்றாக கலந்து விட்டு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
கடைசியாக உதட்டிற்கு லிப் பாம் தயார் செய்தல்:
5 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு நீங்கள் அடுப்பில் இருக்கும் ரோஜா இதழ் எண்ணெயை சிறிது நேரம் ஆற விடுங்கள்.
சிறிது நேரம் கழித்த பிறகு வடிகட்டியை எடுத்துக்கொண்டு அதில் ஆற வைத்துள்ள ரோஜா இதழ் எண்ணெயில் இருந்து சாறு பிழிந்து அதனை மூடி பிரிட்ஜில் வைத்து விடுங்கள். இப்போது உதட்டிற்கு லிப் பாம் தயாராகிவிட்டது.
அப்ளை செய்யும் முறை:
நீங்கள் தயார் செய்து வைத்துள்ள லிப் பாமை 2 மணி நேரத்திற்கு பிறகு பிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து அதனை உங்களுடைய உதட்டில் நன்றாக அப்ளை செய்து விட்டு 5 நிமிடம் கழித்த பிறகு குளிர்ந்த நீரால் உதட்டை கழுவி விடுங்கள்.
இதனை மட்டும் நீங்கள் செய்தால் போதும் உங்களுடைய உதடு சிவப்பாகும் மற்றும் அழகாகவும் மாறிவிடும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |