கேரளா பெண்கள் முடியின் வளர்ச்சிக்காக இந்த எண்ணெய் தான் தடவுகிறார்களாம்

Advertisement

How to Prepare Hair Oil at Home in Tamil

முடியின் வளர்ச்சிக்காக பலரும் எண்ணெய் மற்றும் ஷாம்புகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவையாவும் நல்ல ரிசல்ட்டை கொடுத்தாலும் நாளடைவில் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். இன்னும் சில நபர்கள் கேரளா பெண்களுக்கு மட்டும் முடி அதிகமாக இருக்கிறதே என்ன தான் செய்கிறார்கள் என்று யோசிப்பார்கள். அப்படி யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். கேரளா பெண்கள் முடியின் வளர்ச்சிக்காக பயன்படுத்தும் எண்ணெயை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். வாங்க என்ன எண்ணெய் என்று தெரிந்து கொண்டு அந்த எண்ணெயை பயன்படுத்தி முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தவும்.

கேரளா பெண்கள் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்:

கேரளப் பெண்களின் முடி அதிகமாகவும், கருமையாகவும் இருக்கும் அழகான பளபளப்பான முடிக்கு பெயர் பெற்றவர்கள். இதற்குப் பின்னால் உள்ள இரண்டு காரணங்கள் அவர்களின் உணவு முறை மற்றும் இரகசிய முடி எண்ணெய் மட்டும் தான். கேரளாவில் மீன்கள் முக்கிய உணவாக உள்ளது, மீனில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு அவசியமாக இருக்கிறது. 

 கறிவேப்பிலையில் பீட்டா கரோட்டின் மற்றும் புரோட்டீன் உள்ளடக்கம் அதிகமாக உள்ளது, இவை முடி உதிர்வை நிறுத்துவதில் இன்றியமையாதவை. இது முடி முன்கூட்டியே நரைப்பதையும் தடுக்கிறது. வெந்தயம் முடியை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. செம்பருத்தி பூ முடியின் வேர்களை பலமாக வைத்து கொள்கிறது. சின்ன வெங்காயம் வழுக்கையாக உள்ள இடத்திலும் புதிய முடி வளர உதவுகிறது.  

தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் பாத வெடிப்பை சரி செய்யலாம்

எண்ணெய் செய்முறை:

kerala hair oil preparation in tamil

முதலில் வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைக்கவும். செம்பருத்தி பூக்கள் 4 எடுத்து தூளாக அரைத்து கொள்ளவும். பிறகு ஊறிய வெந்தயம், கருவேப்பிலை, கற்றாழை ஜெல், செம்பருத்தி தூள், சின்ன வெங்காயம் போன்றவை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அடுப்பில் இரும்பு கடாய் வைத்து அதில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அதில் அரைத்த பேஸ்ட்டை சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும் போது எண்ணெயில் சத்தம் ஏற்படும். சத்தம் நின்றதும் கருப்பு மிளகு தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு அடுப்பை அணைத்து ஆற விடவும்.

எப்படி பயன்படுத்துவது.?

இந்த எண்ணெயை பயன்படுத்துவதற்கு முன் சூடான தண்ணீரில் உள்பகுதியில் உங்கள முடிக்கு தேவையான அளவு எண்ணெயை ஓர் கிண்ணத்தில் ஊற்றி வைக்கவும். லேசாக சூடு வந்ததும் இந்த எண்ணெயை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து தலை தேய்த்தது குளிக்கவும்.

ஆச்சரியமாக இருக்கா ஒரே ஒரு பொருளை வைத்து முடியை எப்படி வேகமாக வளரச்செய்வது என்று…

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement