நரை முடி வராமல் தடுக்க
அனைவருமே முக அழகிற்கும், முடி ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இருந்தாலும் இன்றைய கால இளைஞர்களுக்கு நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. 30வயது இளைஞர்களுக்கு நரை முடி ஏற்பட்டால் வயதானதோற்றம் போல் காட்சியளிக்கும். அதுமட்டுமில்லாமல் நரை முடி ஏற்பட்டால் நம்பிக்கை தன்மை குறைந்து காணப்படும். நீங்கள் நரை முடி வந்த பிறகு அதற்கான சிகிச்சையை மேற்கொள்வதை விட வருவதற்கு முன்னரே அதனை தடுப்பது சிறந்த வழியாக இருக்கும். அதனால் இந்த பதிவில் நரை முடி வருவதற்கான காரணம் மற்றும் அதனை தடுப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
நரை முடி வருவதற்கான காரணம்:
நம் உடலில் மெலனின் என்ற நிறமி தான் நம் தோலின் நிறத்தை நிர்ணயம் செய்கிறது. அது போல தான் யூமெலனின் (Eumelanin), பயோ மெலனின் (Bio-melanin) என்ற இரு நிறமிகள் தான் முடியின் கருமை நிறத்திற்க்கு காரணமாக இருக்கின்றன. இந்த நிறமிகளின் உற்பத்தி குறைவதால் தான் நரை முடி ஏற்படுகிறது.
பொதுவாக இவை 40 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு நிறை முடி ஏற்படும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் இளம் வயதினருக்கே நரை முடி ஏற்படுகிறது.
மரபியல் காரணங்கள், புகைபிடித்தல், மது அருந்துதல், துரித உணவு உண்பது, புரதச்சத்துக் குறைபாடு மற்றும் `பயோட்டின்’ (Biotin) எனும் ஊட்டச்சத்து குறைதல், வேதிப்பொருட்களை அதிகமாகக்கொண்ட ஷாம்பூக்களைப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது.
தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!
மேலும் மன அழுத்தம், தூக்கமின்மை பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம், போன்றவற்றாலும் நரை முடி ஏற்படுகிறது.
வைட்டமின் குறைபாடு இருந்தாலும் இளம் வயதிலேயே நரை முடி ஏற்படும்.
நரை முடி வராமல் தடுப்பது எப்படி.?
முதலில் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும், சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.
உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அதனை தவிர்ப்பதற்கு உங்களுக்கு பிடித்த செயல்களை செய்து மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும்.
கெமிக்கல் நிறைந்த எண்ணெய்கள், ஷாம்புகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
தலைக்கு தேங்காய் எண்ணெய் தவறாமல் வைக்க வேண்டும். தலையை வறட்சி இல்லாமல் கவனிப்பது அவசியமானது.
அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும். அதில் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து கொதிக்க விடவும். கருவேப்பிலை எண்ணெயில் கலந்து கருமை நிறம் வந்ததும் அடுப்பை அனைத்து விடவும். இந்த எண்ணெயை நீங்கள் தலைக்கு தடவி 30 நிமிடம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்க வேண்டும். இல்லையென்றால் இரவு முழுவதும் வைத்திருந்து கூட மறுநாள் காலையில் தலை தேய்த்து குளிக்கலாம். இந்த முறையை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தினால் நரை முடி வருவது தடுக்கலாம்.
கூந்தல் மற்றும் சரும அழகை பாதுகாக்கும் ஒரே எண்ணெய் உங்களுக்கு தெரியுமா
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |