கன்னத்தில் உள்ள அதிகப்படியான சதை குறைக்க..! இதோ சில டிப்ஸ் உங்களுக்காக..!

கன்னத்தில் உள்ள சதை குறைய

 கன்னத்தில் உள்ள சதை குறைய டிப்ஸ்..!

வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் அன்பான நேயர்களே… இன்று இந்த பதிவில் கன்னத்தில் உள்ள அதிகப்படியான சதையை குறைப்பது எப்படி என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அழகுபடுத்தி கொள்வதில் அதிகம் அக்கறை எடுத்து கொள்பவர்கள் பெண்களாகவே இருப்பார்கள். சிலர் ஒல்லியாக இருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு கன்னத்தில் அதிகப்படியான சதை இருக்கும். இப்படி கன்னத்தில் இருக்கும் சதையை குறைப்பதற்கு உங்களுக்காக சில டிப்ஸ் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கன்னத்தில் உள்ள சதை குறைய:

என்ன தான் ஒல்லியாக இருந்தாலும் கன்னம் மட்டும் குண்டாக இருக்கிறதே. எவ்வளவோ உடற்பயிற்சிகள் செய்தாலும் கன்னத்தில் உள்ள சதை குறையவில்லை என்று கவலை படுகிறீர்களா..? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்…

இதையும் படியுங்கள் ⇒ கொழு கொழு கன்னம் பெற 

டிப்ஸ் – 1:

தண்ணீர்

நீர்ச்சத்து குறைபாடு இருந்தால் கன்னம் குண்டாக மாற வாய்ப்புள்ளது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமான ஓன்று. அதிகளவு தண்ணீர் குடிப்பதால் உங்கள் கன்னத்தில் உள்ள சதை குறைய வாய்ப்புள்ளது. இது மட்டுமில்லாமல் தண்ணீர் குடிப்பதால் உங்கள் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைகிறது.

டிப்ஸ் – 2:

பார்லி தூள் 2 ஸ்பூன் மற்றும் முல்தானி மெட்டி 1 ஸ்பூன் சேர்த்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேஷியல் செய்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதுபோன்று வாரத்தில் 3 முறை செய்து வருவதால் முகத்தில் உள்ள சதை குறைந்து முகம் பொலிவாக இருக்கும்.

டிப்ஸ் – 3:

உப்பு

நீங்கள் அன்றாடம் சாப்பிடும் உணவில் உப்பு அதிகமாக சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும். உப்பு அதிகமாக சேர்த்து கொள்வதால் அது உடம்பில் உள்ள தண்ணீரின் அளவை குறைக்கிறது. அதனால் முக வீக்கம் ஏற்படுகிறது. எனவே முகத்தில் உள்ள சதையை குறைப்பதற்கு உப்பின் அளவை குறைக்க வேண்டும்.

டிப்ஸ் – 4:

  • உங்கள் இரு கன்னங்களையும் சப்பையாக வைத்து உதட்டை கூப்பிக்கொள்ள வேண்டும்.
  • 30 வினாடிகள் வரை மூச்சைப் பிடித்து கொண்டு பின் உதடுகளை விடுவித்து மூச்சை மெதுவாக விட வேண்டும்.
  • இதுபோன்று தினமும் காலை பொழுதில் 5 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள தேவையற்ற சதை குறையும்.

டிப்ஸ் – 5:

  • மூச்சை நன்றாக இழுத்து கொள்ள வேண்டும்.
  • பின் மூச்சை மெதுவாக வாய் வழியாக விட வேண்டும்.
  • இதுபோல தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் 5 முறை செய்து வந்தால் கன்னத்தில் உள்ள சதை குறையும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil