How to Remove Dandruff Permanently in Tamil
இன்றைய சூழலில் உள்ள மாசுபாட்டின் காரணமாக பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி உள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்றால் தலையில் பொடுகு அதிகமாக உள்ளது அதன் காரணமாக தலைமுடி அதிகமாக உதிர்வது தான். இதனை போக்குவதற்காக நாமும் பல வேதிப்பொருட்கள் கலந்துள்ள ஷாம்பு போன்றவற்றை பயன்படுத்திருப்போம். ஆனால் அவையாவும் நல்ல பலனையும் அளித்திருக்காது. மேலும் உங்கள் தலைமுடி உதிர்வை அதிகப்படுத்தியும் இருக்கும். அதனால் அப்படிப்பட்ட வேதிப்பொருட்கள் கலந்துள்ள ஷாம்பு போன்றவற்றை பயன்படுத்தாமல், உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி தலையில் உள்ள பொடுகினை முற்றிலும் போக்குவதற்கான சில குறிப்புகளை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How to Get Rid of Dandruff and Hair Fall in Tamil:
வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி தலையில் உள்ள பொடுகினை முற்றிலும் போக்குவதற்கான சில குறிப்புகளை பற்றி விரிவாக பார்க்கலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி காணலாம்.
- தேங்காய் எண்ணெய் – 500 மி.லி
- வேம்பாளம் பட்டை – 1 கைப்பிடி அளவு
- மிளகு – 10
- விளக்கெண்ணெய் – 2 டீஸ்பூன்
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 500 மி.லி தேங்காய் எண்ணெயை ஊற்றி அதனுடனே 1 கைப்பிடி அளவு வேம்பாளம் பட்டை , 2 டீஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் 10 மிளகினை நன்கு பொடியாக அரைத்து அதனுடனே சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
பின்னர் அதனை அடுப்பில் இருந்து இறக்கி நன்கு குளிர விடுங்கள். பிறகு அதனை ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள். இதனை தலையில் தடவி 1/2 மணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் தலையில் உள்ள பொடுகு அனைத்தும் நீங்கி தலை முடி உதிர்வு நின்று தலைமுடி நன்கு வளர்வதை நீங்களே காணலாம்.
இதையும் படித்துப்பாருங்கள்=> உங்களின் தலையில் உள்ள பொடுகு நீங்கி தலைமுடி நன்கு வளர இதை ட்ரை பண்ணுங்க
How to Cure Dandruff Permanently in Tamil:
முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி காணலாம்.
- சின்ன வெங்காயம் – 10
- மிளகு – 10
- வேப்பிலை – 1 கைப்பிடி அளவு
மேலே கூறியுள்ள பொருட்களை அனைத்தையும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பசை போல் அரைத்து கொள்ளுங்கள். பின்னர் இதனை தலையில் தடவி 1/2 மணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் தலையில் உள்ள பொடுகு அனைத்தும் நீங்கி தலைமுடி உதிர்வு நின்று தலைமுடி நன்கு வளர்வதை நீங்களே காணலாம்.
இதையும் படித்துப்பாருங்கள்=> நிரந்தரமாக பொடுகு தொல்லை நீங்க இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |