கருவளையம் மறைய டிப்ஸ்..! கருவளையம் உடனே நீங்க..! Karuvalayam Poga Tips in Tamil..!

Advertisement

கருவளையம் உடனே நீங்க டிப்ஸ்..! Karuvalayam Poga Tips in Tamil..!

கருவளையம் உடனே நீங்க / kan karuvalayam poga tips: பெண்கள் அதிகமாக சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனைதான் கருவளையம், (dark circles) இந்த பிரச்சனை பலவகையான காரணங்களினால் ஏற்படுகிறது. குறிப்பாக அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன.

இந்த கருவளையம் வந்துவிட்டால் முக அழகே பொலிவிழந்து காணப்படும். வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். சரிவாருங்கள் இவற்றில் கருவளையம் போக என்னென்ன குறிப்புகள் இருக்கின்றது என்று நாம் காண்போம்.

கருவளையம் உடனே மறைய இதைவிட சிறந்த வழி வேறில்லை..!

கருவளையம் உடனே நீங்க – உருளை கிழங்கு சாறு:

Karuvalayam Poga Tips in Tamil: கருவளையம் போவதற்கு என்ன செய்வது? உருளைக்கிழங்கை அரைத்து அவற்றில் இருக்கும் சாறினை தனியாக வடிகட்டி கொள்ளவும். பின்பு ஒரு காட்டன் துணியை எடுத்து கொள்ளவும். அந்த துணியை அந்த சாற்றில் நனைத்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் வரை ஊற வைத்து, பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்தது செய்து வர எளிதில் கருவளையம் (dark circles) மறைந்து விடும்.

கருவளையம் மறைய டிப்ஸ் – எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாறு:

Karuvalayam Poga Tips in Tamil(கருவளையம் மறைய டிப்ஸ்): எலுமிச்சை மற்றும் தக்காளி இவை இரண்டும் நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு இயற்கை பொருளாகும். எனவே இவற்றின் சாறை ஒன்றாக கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் (dark circles) குறைந்துவிடும்.

கருவளையம் உடனே நீங்க – தக்காளி ஜூஸ்:

Karuvalayam Poga Tips in Tamil: தக்காளி ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு முறை, சிறிது புதினா மற்றும் உப்பை சேர்த்து கலந்து குடித்து வந்தால், கருவளையங்கள் (dark circles) நாளடைவில் நீங்கிவிடும்.

கருவளையம் மறைய – பாதாம்:

Karuvalayam Poga Tips in Tamil: பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து, பேஸ்ட் போல் செய்து, கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருமையான வளையம் போய்விடும்.

கருவளையம் உடனே நீங்க – அன்னாசி:

Karuvalayam Poga Tips in Tamil: மற்றொரு முறை ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாற்றுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் தடவி வந்தால், கருவளையங்கள் நீங்கி, முகம் நன்கு பொலிவோடு காணப்படும்.

கருவளையம் உடனே நீங்க – க்ரீம்:

Karuvalayam Poga Tips in Tamil: இல்லையெனில் தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும்.

கருவளையம் உடனே நீங்க – விளக்கெண்ணெய்:

Karuvalayam Poga Tips in Tamil: இரவு தூங்கும் முன்பு இரண்டு துளிகள் விளக்கெண்ணெய் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் கருவளையம்(karuvalayam) மறைந்து விடும்.

கருவளையம் உடனே நீங்க – புதினா:

Karuvalayam Poga Tips in Tamil: சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து , அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். கண்களில் கருவளையம் வருவதற்கு கண்கள் களைப்புடன் இருப்பதும் ஒரு காரணம். ஆகவே இந்த முறை கண்களை புத்துணர்ச்சியாக்கும்.

கருவளையம் மறைய டிப்ஸ் – வெள்ளரிக்காய்:

Karuvalayam Poga Tips in Tamil: 2 துண்டு வெள்ளரிக்காயில், அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து அரைத்து, இதை தினமும் கண்களைச் சுற்றிலும் பூசி, 3 நிமிடம் கழித்து கழுவினால் கருவளையம் (dark circles) மறைந்து போகும்.

கருவளையம் உடனே நீங்க – சந்தனம், ஜாதிக்காய்:

Karuvalayam Poga Tips in Tamil: சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

கருவளையம் உடனே நீங்க – திராட்சை:

Karuvalayam Poga Tips in Tamil: கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் மறைய திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த வழியை பயன்படுத்தி கண்களை சுற்றி உள்ள பகுதியில் கருவளையங்கள் வர விடாமல் தடுக்க முடியும்.

முக்கிய குறிப்பு:

  • கண்களில் உள்ள மேக்கப்பை, அது சாதாரண மையாக இருந்தாலுமே, நீக்காமல் தூங்கச் செல்லக் கூடாது. மேக்கப் ரிமூவர் வைத்து, முறையாக அகற்ற வேண்டும்.
  • அகற்றாமல் விட்டால், கண்களுக்கடியில் கருவளையங்கள் உருவாகலாம்.
  • இரவில் கண்களுக்கான நைட் கிரீம் தடவலாம். அது கண்களின் களைப்பை நீக்கும்.
  • கண்களுக்கடியிலான சுருக்கங்கள், கருவளையங்கள், கோடுகளையும் நீக்கும்.காலையிலும் இரவிலும் வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் வைத்துக் கொண்டு 10 நிமிடங்கள் ஓய்வெடுத்தால், கண்களுக்கடியில் வீக்கம் வடியும். கருமை மறையும்.
  • கருவளையங்கள் அதிகமாக இருந்தால், அதற்கான முறையான சிகிச்சை அவசியம். பார்லர்களில் அதற்கென்றே பிரத்யேக மசாஜ் செய்யப்படுகிறது.
  • தொடர்ந்து செய்து கொண்டால், முற்றிலும் மறையாவிட்டாலும், ஓரளவு மாற்றம் தெரியும். சிலருக்கு ஸ்ட்ரெஸ்சின் காரணமாக கருவளையங்கள் வரும்.

ஒரே இரவில் கருவளையம் உடனே நீங்க டிப்ஸ்..!

 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!
Advertisement