முகத்தில் கரும்புள்ளி மறைய
பொதுவாக பெண்களுக்கு எவ்வளவு தான் வேலை இருந்தாலும் கூட முகத்திற்கு என்று தனி நேரத்தை ஒதுக்கி சிலர் பராமரித்து வருவார்கள். ஆனால் சிலருக்கு இவை அனைத்திற்கும் நேரம் இல்லமால் முகத்தை பராமரிக்காமல் விட்டு விடுவார்கள். முகத்தின் அழகை கெடுப்பது என்றால் அது முகத்தில் வரும் பருக்களினால் தான். பருக்கள் சாதரணமாக வந்து மறைவதில்லை. அத்தகைய முகத்தில் பருக்கள் காலப்போக்கில் கரும்புள்ளிகளாகவும் மாறிவிடுகிறது. இப்படிப்பட்ட கரும்புள்ளிகள் மறைவது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதனால் தான் இன்று உங்களுடைய முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையவும் மற்றும் முகத்தை 24 மணி நேரமும் பொலிவாக வைத்து இருக்கவும் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How to Remove Dark Spots on Face Naturally:
அதனால் இதனை முகத்திற்கு பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கி முகம் பொலிவு பெரும்.
தேவையான பொருட்கள்:
- தக்காளி- 1
- தேங்காய் பால்- 4 தேக்கரண்டி
- தேன்- 2 தேக்கரண்டி
- கஸ்தூரி மஞ்சள்தூள்- 1 தேக்கரண்டி
- Rosehip எண்ணெய்- 2 தேக்கரண்டி
- அரிசிமாவு- 2 தேக்கரண்டி
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 ஒரே வாரத்தில் உங்கள் முடி அசுரவளர்ச்சி அடைய இந்த மூன்று டிப்ஸை மற்றும் பாலோ பண்ணுங்க..!
குறிப்பு- 1
முதலில் ஒரு தக்காளியை எடுத்துக்கொண்டு அதனை வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு சிறிய பவுலில் 4 தேக்கரண்டி தேங்காய் பால் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தக்காளி பிஸினை 5 நிமிடம் நன்றாக நனைத்து வைத்து கொள்ளுங்கள்.
5 நிமிடம் கழித்த பிறகு அதனை வெளியே எடுத்து முகத்தில் 10 நிமிடம் அப்ளை செய்து முகத்தை கழுவி விடுங்கள். இப்படி செய்வதனால் பொலிவு இழந்த உங்களுடைய சருமத்தை பொலிவு பெற செய்யும்.
குறிப்பு- 2
நம்முடைய முகத்தில் பருக்கள் வந்து இருந்தால் அந்த இடம் ஒரு மாதிரியாக தோற்றம் அளிக்கும். அதனை சரி செய்வதற்கு ஒரு துண்டு தக்காளி பீஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துவைத்துள்ள தக்காளி பீஸை வைத்து அதன் மேலே 2 தேக்கரண்டி தேன் ஊற்றி நன்றக 2 நிமிடம் ஊற வைத்து விடுங்கள்.
2 நிமிடம் கழித்த பிறகு அந்த தக்காளியை முகத்தில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்து 10 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். 10 நிமிடம் கழித்த பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள்.
இதையும் படியுங்கள்⇒ 3 வாரம் இந்த எண்ணெயை தடவினால் முடி கொட்டுவது, பொடுகு தொல்லை இன்னும் நிறைய பிரச்சனைக்கு மருந்து இது தான்..!
குறிப்பு- 3
அடுத்தாக ஒரு பவுலில் நறுக்கி வைத்துள்ள தக்காளியில் 1 பீஸ் எடுத்துக்கொண்டு அதன் மேலே 1 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள்தூளினை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு கஸ்தூரி மஞ்சள்தூள் கலந்து அந்த தக்காளியினை முகத்தில் 10 நிமிடம் வரை அப்ளை செய்து அதன் பிறகு வழக்கம்போல முகத்தை கழுவி விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் அனைத்தும் மறைந்து விடும்.
குறிப்பு- 4
நான்காவதாக நாம் பார்க்கப்போகும் குறிப்பு எதற்கு என்றால் முகம் கண்ணாடி போல பொலிவு பெற்று பளபளப்பதற்கானதாகும். அதற்கு முதலில் தக்காளி 1 பீஸ் எடுத்துக்கொண்டு அதன் மேலே Rosehip ஆயில் 5 சொட்டு விட்டு 2 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.
2 நிமிடம் கழித்த பிறகு முகத்தில் அப்ளை செய்து வைத்து இருந்து 10 நிமிடம் கழித்த பிறகு முகத்தை கழுவி விடுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வழுக்கையாக உள்ள இடத்திலேயும் புதிய முடி வளர இதை ட்ரை பண்ணுங்க போதும்..!
குறிப்பு- 5
முகத்தில் இருக்கும் கருமை அனைத்தும் நீங்கி முகம் முழுவதுமாக பொலிவு பெறுவதற்கு முதலில் 1 பீஸ் தக்காளி எடுத்துக்கொண்டு அதன் மேலே அரிசிமாவு 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்போது கலந்து வைத்துள்ள தக்காளி பிஸினை முகத்தை நன்றாக மசாஜ் செய்து 5 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள்.
மேலே சொல்லப்பட்டுள்ள 5 குறிப்புகளையும் வரிசையாக 10 நிமிடம் இடைவெளி விட்டு விட்டு செய்தால் போதும். நீங்கள் எதிர்பார்த்த மாதிரி முகத்தில் இருக்கும் தேவையற்ற கரும்புள்ளிகள் அனைத்தும் மறந்து முகம் கண்ணாடி போல பொலிவு பெற்று இருக்கும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |