முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க | Face Hair Removal Home Tips Tamil
Mugathil Mudi Neenga Tamil Tips / முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க: பெண்களின் முகம் ரோமங்களின்றி மிருதுவானதாக இருக்கும். ஆனால் சில பெண்களுக்கு முகத்தில் ரோமங்களின் வளர்ச்சி அதிகம் இருக்கும்.இதற்கு ஹார்மோன்களே முக்கிய காரணம். இந்த ஹார்மோன்களால் சில பெண்களுக்கு மீசையும், தாடியும் தெரிவதோடு, சிலருக்கு நெற்றியில் ரோமம் அதிகளவில் இருக்கும்.இந்த முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று, அந்த ரோமங்களை நீக்குவார்கள்.
இருப்பினும் நீங்கள் அழகு நிலையத்திற்கு சென்று சருமத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்கினாலும் திரும்பவும் அதே இடத்தில் முடி வளரும். எனவே முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க இயற்கை முறையில் மிகவும் எளிதாக, அகற்றிவிட சில குறிப்புகள் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது. சரி வாருங்கள் முகத்தில் முடி வளராமல் இருக்க அல்லது முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க (How to Remove Face Hair Permanently with Home Remedy) அப்படி என்னென்ன குறிப்புகள் உள்ளது என்று காண்போம். அது அவர்களுது முக அழகையே பாதிக்கும். அதேபோல் பெண்களின் முகம் முடி ரோமங்களின் வளர்ச்சி அதிகம் இருக்கும் இருப்பினும் சிலருக்கு அவ்வாறு இருக்காது. எனவே முன் அந்த ரோமங்களை நீக்குவார்கள். நாம் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் போதும் மிக எளிதாகவே இந்த பிரச்சனையை நாம் சரி செய்துவிட முடியும்
உடம்பில் தேவையில்லாத முடிகளை நீக்க.!
Remove Hair From Face in Tamil | முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற டிப்ஸ்:
- முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க :- சிறிதளவு சர்க்கரையுடன், எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கலவையாக தயார் செய்து கொள்ளவும்.
- இந்த கலவையை முகத்தில் இருக்கும் ரோமங்கள் மீது தடவி 5 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
- முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்கலாம்.
முகத்தில் இருக்கும் முடி உதிர:

- முகத்தில் உள்ள முடியை நிரந்தரமாக நீக்க :- மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.
- பின்பு முகத்தை நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர முகம் பளபளப்பாவதுடன், முகத்தில் இருக்கும் முடி உதிர்ந்து விடும்.
அல்லது:
- Remove Hair From Face in Tamil :- ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளவும். அவற்றில் சிறிதளவு கடலை மாவு, தேவையான அளவு மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு கடுகு எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, ஒரு பேஸ்ட்டு போல் தயாரித்து கொள்ளவும்.
- பின்பு முகத்தில் இருக்கும் ரோமங்களின் மீது தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.
- இவ்வாறு செய்வதினாலும் கூட முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும்.
முகத்தில் இருக்கும் முடி நீங்க:
- தேவையற்ற முடியை நீக்குவது எப்படி ?? அல்லது முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து சருமத்தில் இருக்கும் ரோமங்கள் மீது தடவி, சிறிது நேரம் கழித்து, முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
- இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் இருக்கும் தேவையற்ற ரோமங்கள் நீங்கி விடும் (Mugathil Ulla Mudi Neenga). முகத்திற்கும் மிகவும் நல்லது.
முகத்தில் உள்ள முடியை நிரந்தரமாக நீக்க
- முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க :- சிறிதளவு எலுமிச்சை சாறுடன், தேவையான அளவு தேன் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதில் தடவி 15 முதல் 20 நிமிடம் வரை காத்திருக்கவும்.
- பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
- இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வர முகத்தில் உள்ள முடி நீங்க ஆரமிக்கும்.
முகத்தில் முடி நீங்க பாட்டி வைத்தியம்:
- முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க :- இந்த நெட்டில் இலையை நீரில் கழுவி நன்கு அரைத்து கொள்ளவும்.
- பின்பு அவற்றில் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
- பிறகு முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் மீது தடவ வேண்டும். பின்பு இரண்டு மணி நேரம் வரை காத்திருக்கவும்.
- பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
- இந்த முறையை இரவு தூங்கும் முன் மேற்கொண்டு, மறுநாள் காலையில் கழுவினால், இன்னும் சிறப்பான பலனைக் காணலாம்.
- முகத்தில் உள்ள முடி நீங்க வேண்டுமானால், இந்த முறையை தினமும் என 4-6 வாரம் தொடர்ந்து செய்து வாருங்கள்.
- மேல் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின் எதாவது ஒன்றை பின்பற்றினாலே போதும் உங்களது முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நிரந்தரமாக அகற்றி விட முடியும்.
- கை கால் முடி உதிர, உதட்டின் மேல் உள்ள முடி நீங்க, உடலில் முடி வளராமல் இருக்க, அக்குளில் முடி வளராமல் இருக்க, தேவையற்ற முடி உதிர பாட்டி வைத்தியம் மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து செய்து வர முகத்தில் உள்ள முடிகள் நிரந்தரமாக நீங்கி (mugathil ulla mudi neenga) முகம் பிரகாசமாக காணப்படும்.
Home Remedies for Removing Facial Hair in Tamil:

ஒரு மிக்ஸி ஜாரில் 1/2 ஸ்பூன் ஓட்ஸை சேர்த்து நன்கு பொடியாக அரைத்துஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை முகத்தில் தேவையற்ற முடிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் அல்லது 20 நிமிடம் வரை உலர விடவும். அதன் பிறகு, கைகளை பயன்படுத்தி முகத்தை வட்ட இயக்கத்தில் தேய்த்து விடவும். பிறகு, முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். இதனை வாரம் இருமுறை பயன்படுத்தி வருவதன் மூலம் முகத்தில் உள்ள முடிகள் உதிர தொடங்கும்.
கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர்:
ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவை எடுத்து கொள்ளுங்கள். இதில் தேவையான அளவு ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து எடுத்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் வரை உலரவிட்டு அதன் பிறகு, நன்கு தேய்த்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடுங்கள். இந்த முறையை நீங்கள் வாரம் இரண்டு முறை பயன்படுத்தி வருவதன் மூலம் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் உதிரும்.
கண்ணில் உள்ள கருவளையம் நீங்க கிராமத்து ரெமிடி ட்ரை பண்ணுங்க
பால் மற்றும் ஜெலட்டின்:
ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் பால், 3 ஸ்பூன் ஜெலட்டின் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இதனை அடுப்பில் வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தி கொள்ளுங்கள். அதன் பிறகு, இதனை நன்கு ஆறவைத்து அதன் பிறகு முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் வரை உலரவிடுங்கள். அடுத்து, நன்கு தேய்த்து விட்டு குளிர்ந்த நீரைக்கொண்டு கழுவி விடுங்கள். இந்த முறையை நீங்கள் வாரம் இரண்டு முறை பயன்படுத்தி வருவதன் மூலம் முகத்தில் உள்ள தேவையற்ற முடி நீங்கிவிடும்.
| இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |














