அக்குள் வியர்வை துறுநாற்றத்தை போக்க இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

How to Remove Smell of Sweat From Underarms 

இன்றைய காலத்தில் உள்ள அனைவரும் முகத்திற்கு என்றும், உடலிற்கும் என்றும் நிறைய பவுடர், கிரீம் மற்றும் சோப் என விதவிதமாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் இவற்றில் எவ்விதமான பலன்களும் முழுமையாக கிடைப்பது இல்லை. அந்த வகையில் பார்த்தோம் என்றால் ஆண்கள் முதல் பெண்கள் வரை என பெரும்பாலான மக்களுக்கு அக்குள் வியர்வை துறுநாற்றம் வீசக்கூடிய பிரச்சனை தான் இருக்கிறது. இத்தகைய துறுநாற்றத்தை மறைப்பதற்காக வீட்டில் இருக்கும் போதும் சரி, வெளியில் செல்லும் போதும் சரி வாசனை திரவியங்களை பயன்படுத்துவது என்பது நம்முடைய பழக்கமாக இருக்கிறது. ஆனால் இத்தகைய வாசனை திரவியங்கள் 2 மணி நேரம் அல்லது 3 மணி நேரம் மட்டுமே அக்குளில் இருந்து வியர்வை வராமல் இருக்க செய்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு மீண்டும் துறுநாற்றம் வீச ஆரம்பமாகிறது. இத்தகைய அக்குள் வியர்வை பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான குறிப்புகளை தான் இன்றைய அழகுக்குறிப்பு பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வியர்வை நாற்றம் காரணம்:

நம்முடைய உடலில் இருந்து வரும் வியர்வை ஆனது கெட்ட பாக்டீரியாவுடன் இணைவதால் தான் உடலில் துறுநாற்றம் வீசுகிறது. குறிப்பாக அக்குள் பகுதிகளில் வியர்வை துறுநாற்றம் வீச இதுவே காரணமாக அமைகிறது.

அக்குள் துர்நாற்றம் நீங்க

மஞ்சள்:

மஞ்சள்மஞ்சள் எந்த ஒரு பிரச்சனையாக  இருந்தாலும் கூட அதற்கு சிறந்த ஒரு தீர்வினை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இதன் படி பார்க்கும் போது மஞ்சள் ஆனது அக்குள் வியர்வை துறுநாற்றத்தையும் நீக்குகிறது.

 

 

அதனால் விரலி மஞ்சள் இருந்தால் அதனை பேஸ்ட் போன்ற பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் வீட்டில் பயன்படுத்தும் மஞ்சள் தூளில் சிறிதளவு கிண்ணத்தில் சேர்த்து பேஸ்ட் போல கலந்து பின்பு இதை அக்குளில் தடவி விட்டு 10 நிமிடம் குளித்த விடுங்கள். இவ்வாறு செய்தால் அக்குளில் வியர்வை துறுநாற்றம் என்பதே இருக்காது.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் ஆனது வியர்வை துறுநாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்களை அழிக்க உதவும். அதனால் எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு பிழிந்து கொள்ள வேண்டும்.

பின்பு அந்த எலுமிச்சை சாற்றை குளிக்க போகும் 5 நிமிடத்திற்கு முன்பாக அக்குள் பகுதிகளில் தேய்த்து பின்பு குளிக்க வேண்டும். இத்தகைய முறையினை பின்பற்றுவதன் மூலம் வியர்வை துறுநாற்றம் நீங்கிவிடும்.

வியர்வை வராமல் இருக்க இதெல்லாம் பண்ணுங்க 

தினமும் குளிப்பது:

 குளிப்பது

தினமும் 1 அல்லது 2 முறை கண்டிப்பாக குளிக்க வேண்டும். அதுவும் உடம்பில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கும் அளவிற்கு சுத்தமாக குளித்தாலே போதும் உடலில் துறுநாற்றம் எதுவும் இல்லாமல் இருக்கும்.

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கு

உடம்பில் அதிகமாக அழுக்கு இருக்கும் இடத்தில் இருந்து வியர்வை துறுநாற்றம் வீசுகிறது என்றால் முதலில் ஒரு உருளைகிழங்கை எடுத்துக்கொள்ளுங்கள்.

அதன் பிறகு அந்த உருளைக்கிழங்கின் தோலினை நீக்கிவிட்டு கிழங்கினை சிறு சிறு துண்டாக மெல்லியதாக நறுக்கி அழுக்கு படிந்து வியர்வை நாற்றம் வரும் இடத்தில் மிதமான பதத்தில் தேய்த்து 5 நிமிடம் கழித்து குளித்து விட வேண்டும். 

இப்படி செய்வதால் அழுக்கும் இருக்காது, வியர்வை நாற்றமும் இருக்காது.

கற்றாழை ஜெல்:

 கற்றாழை

முகம் மற்றும் முடிக்கு அதிகமான நன்மையினை அளிக்ககூடியது என்றால் அது கற்றாழை தான். இந்த கற்றாழை ஜெல் ஆனது அக்குள் வியர்வையில் இருந்து துறுநாற்றத்தினை நீக்கவும் பயன்படுகிறது.

அதற்கு முதலில் கற்றாழையினை சுத்தமாக அலசிக்கொள்ள வேண்டும். பின்பு அதில் இருந்து ஜெல் தயாரித்து கொள்ள வேண்டும். இப்போது அந்த ஜெல்லை அக்குள் பகுதியில் தடவி விட்டு 10 நிமிடம் கழித்து குளித்து விட வேண்டும்.

தலையில் இருக்கும் போடுகினை நீக்குவதற்கு இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துங்க 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement