கண்ணாடி அணிவதால் மூக்கில் தழும்பு வந்துடுச்சா..! அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

கண்ணாடி அணிவதால் மூக்கில் தழும்பு வந்துடுச்சா..! அப்போ இதை ட்ரை பண்ணுங்க (How to remove specks marks on nose in tamil)..!

கண்ணாடி தழும்பு மறைய அழகு குறிப்பு டிப்ஸ் (Beauty tips in tamil):-

தழும்பு மறைய டிப்ஸ் / thalumbu remove in tamil – இப்போது எல்லாம் ஆண்கள், பெண்கள் இருவருமே கண்ணாடி அணிந்து கொள்ளும் எண்ணிக்கையின் அளவு அதிகரித்து கொண்டே இருக்கிறது.  இதற்கு என்ன காரணம் என்றால் கண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், உடலில் போதிய அளவு இல்லை என்பதுதான்.

இதனால் சிறு வயதிலேயே கண்பார்வை குறைபாடு பிரச்சனையை அதிகளவு சந்திக்கின்றன. இம்மாதிரியான பிரச்சனையை தவிர்க்க ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள உணவு முறைகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் பார்வை குறைபாடு பிரச்சனை குணமாகும்.

இங்கு கண்பார்வை குறைபாட்டினால், தொடர்ச்சியாக கண்ணாடி அணிவதால் மூக்கில் தழும்புகள் ஏற்படும். இந்த கண்ணாடி தழும்புகள் மறைய சில அழகு குறிப்பு டிப்ஸினை தெரிந்து கொள்வோம் வாங்க..!

newஉச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கற்றாழை அழகு குறிப்புகள்..!

கண்ணாடி தழும்பு மறைய டிப்ஸ் – (How to remove specks marks on nose in tamil): 1

கண்ணாடி அணிவதினால் ஏற்படும் தழும்பு மறைய டிப்ஸ், அரை வெள்ளரிக்காயை வெட்டி அவற்றில் இருக்கும் தோல் பகுதியை சீவி, மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து தனியாக ஒரு பவுலில் எடுத்து கொள்ளவும்.

பின்பு ஒரு சிறிய தக்காளி பழத்தையும் தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளவும். இவற்றையும் ஒரு பவுலில் தனியாக எடுத்து கொள்ளவும்.

இப்பொழுது ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் அரைத்து வைத்துள்ள வெள்ளரிக்காய் பேஸ்ட் இரண்டு ஸ்பூன், ஒரு ஸ்பூன் தக்காளி பேஸ்ட், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் கிளிசரின் (Glycerine) ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்பு தழும்புகள் ஏற்பட்ட இடத்தில் இந்த பேஸ்ட்டை அப்ளை செய்யுங்கள்.

இந்த முறையை இரவு தூங்குவதற்கு முன் செய்து மறுநாள், காலை முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கண்ணாடி தழும்பு மறைய (spectacle marks) ஆரம்பிக்கும்.

newமுகம் சுருக்கம் நீங்க சில எளிய அழகு குறிப்புகள் ..!

கண்ணாடி தழும்பு மறைய டிப்ஸ் / thalumbu remove in tamil: 2

தழும்பு மறைய டிப்ஸ் – சிறிதளவு ஓட்ஸை மிக்ஷி ஜாரில் சேர்த்து பவுடர் போல் அரைத்து கொள்ளவும்.

பின்பு ஒரு கிளீன் பவுலில் அரைத்த இந்த ஓட்ஸ் பவுடரை எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட்டு போல் கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை தழும்புகள் மீது அப்ளை செய்து, ஒரு 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள். பின்பு வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர கண்ணாடி அணிவதினால் ஏற்படும் தழும்புகள் மறைந்து விடும். சருமம் பொலிவுடன் காணப்படும்.

newமுகம் சிவப்பழகு பெற தேன் இயற்கை அழகு குறிப்புகள்..!Honey Beauty Tips in Tamil..!

கண்ணாடி தழும்பு மறைய டிப்ஸ்: 3

மிக எளிமையான முறையில் கண்ணாடி தழும்பு மறைய டிப்ஸ்(thalumbu remove in tamil). அதாவது உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரிக்காயை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இருக்கும் தோல் பகுதியை சீவிவிட்டு. வட்ட வடிவில் சிறு சிறு துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.

இந்த கட் செய்த துண்டுகளை தழும்புகள் உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். பின்பு 15 நிமிடுங்கள் அப்படியே வைத்திருக்கவும்.

பின்பு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர கண்ணாடி அணிவதினால் ஏற்படும் தழும்புகள் (spectacle marks) மறைந்து விடும்.

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement