2 நாட்களில் மரு நீங்க வெங்காயம் மட்டும் போதும்..!

Advertisement

How to Remove Warts Naturally in Tamil

பொதுவாக அனைவருக்குமே தங்களின் உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஒரு சிலர் மிகவும் அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் அழகினை பாதிக்கும் வகையில் மருக்கள் உருவாகியிருக்கும். அப்படி உருவாகியுள்ள மருக்களினால் வலிகள் கூட ஏற்படும். அதனால் அதனை போக்குவதற்காக நீங்கள் பல வழி முறைகளை கையாண்டிருப்பீர்கள். அவையாவும் உங்களுக்கு கை கொடுத்ததா..? என்றால் நமது பதில் இல்லை என்றே இருக்கும்.

அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உங்களின் அழகை கெடுக்கும் மருவினை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

How to Remove Warts Naturally at Home in Tamil:

How to Remove Warts Naturally at Home in Tamil

இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உங்களின் அழகை கெடுக்கும் மருவினை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம்.

முதலில் அந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. சின்ன வெங்காயம் – 4
  2. சூடம் – 2
  3. கல் உப்பு – சிறிதளவு 
  4. மஞ்சள் தூள் – 1 சிட்டிகை 

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> கோடைகாலத்தில் உங்க முகம் கருமையாக காட்சியளிக்கிறதா அப்போ தேனை இப்படி பயன்படுத்துங்க

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு சின்ன வெங்காயத்தை அதனுடைய தோல்களை நீக்கி விட்டு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பின்னர் அதிலிருந்து சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

சூடத்தை சேர்க்கவும்:

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 சூடங்களை நன்கு பொடியாக்கி சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 30 நிமிடத்தில் உங்கள் தலையில் உள்ள அனைத்து நரைமுடியும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

கல் உப்பினையும் கலக்கவும்:

பிறகு நாம் எடுத்து வைத்துள்ள சிறிதளவு கல் உப்பினையும் நன்கு பொடியாக்கி சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

மஞ்சள் தூளினை சேர்த்து கொள்ளவும்:

இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 1 சிட்டிகை மஞ்சள் தூளினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதில் ஒரு காட்டன் உருண்டையை நினைத்து உங்களுக்கு எங்கெல்லாம் மரு உள்ளதோ அங்கெல்லாம் தடவினீர்கள் என்றால் மருக்கள் விரைவில் மறைந்து போவதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> ஒரே வாரத்தில் உங்களின் பாத வெடிப்பு நீங்க தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement