தலைமுடி பிரச்சனைகளுக்கு பாட்டி வைத்தியம்..!

Advertisement

முடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் Best Home Remedy..!

தலைமுடி பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவம்: வாழ்க்கையே ஒருவிதமா இருக்கும்போது, தலைமுடி (hair fall) பிரச்சனைகள் வேற பலவிதமாக நமக்கு தொல்லையை தருகின்றது. தலை முடி உதிர்வு, வழுக்கை, சொட்டை, இளநரை, செம்பட்டை புழுவெட்டு என்று பலவகைகளில் நமக்கு தொல்லைதரும். இந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் கைவசம் தீர்வுகள் இவற்றில் இருக்கின்றன.

சரி வாங்க அப்படி என்ன தீர்வுகள் இருக்கின்றன என்று இவற்றில் நாம் காண்போம்.

பொடுகு தொல்லையிலிருந்து விடுபட டிப்ஸ் !!!

முடி உதிர்வை (hair fall) தடுக்க வேண்டுமா?

தலைமுடி பராமரிப்பு – வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து, ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை குளித்து வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம்  பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா?

கூந்தல் பராமரிப்பு – கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, தலைக்கு தடவி வந்தால் வழுக்கை விழுந்த இடத்தில் முடி நன்றாக வளரும்.

இளநரை பிரச்சனைக்கு:

தலைமுடி பராமரிப்பு – நெல்லிக்கனியை தினமும் உணவில் சேர்த்து வர இளநரை பிரச்சனை சரியாகும்.

கருமையான முடியை பெற வேண்டுமா?

கூந்தல் பராமரிப்பு – ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

கருமையான மற்றும் மினுமினுப்பான முடியை பெறவேண்டுமா?

கூந்தல் பராமரிப்பு – அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து, கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடிக்கு:

தலைமுடி பராமரிப்பு – மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

தலைமுடி அடர்த்தியாக வளர செய்யும் கண்டிஷனர்..!

நரை முடி பிரச்சனைகளுக்கு:

தலைமுடி பராமரிப்பு – தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால் நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி நன்றாக வளர்வதற்கு:

கூந்தல் பராமரிப்பு – கருவேப்பிலையை நன்றாக அரைத்து, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தினமும் தலையில் தடவி வர முடி நன்றாக வளரும்.

கேரட் மற்றும் எலுமிச்சை பழசாறு ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து நன்றாக காய்ச்சி தடவி வந்தாலும் முடி நன்றாக வளரும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

தலைமுடி பராமரிப்பு – நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

கூந்தல் பராமரிப்பு – நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

கூந்தல் முடி 5 மடங்கு அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும் ..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள் , ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ரங்கோலி, ஆன்மிகம் மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.
Advertisement