தலை முடி உதிர்தல்
இன்றைய காலத்தை பொறுத்தவரை அனைவருக்கும் முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது. என்ன தான் நாம் சத்தான சாப்பாடு சாப்பிட்டாலும் மற்றும் தலைக்கு தினமும் ஹேர் ஆயில் பயன்படுத்தினாலும் கூட முடி உதிர்வு பிரச்சனை என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் உள்ளது. இப்படி இருக்கும் பிரச்சனையை எப்படி சரி செய்வது..? அதற்காக என்ன ஹேர் பேக் பயன்படுத்தலாம் போன்ற நிறைய யோசனைகள் இருக்கும். அத்தகைய யோசனைகளுக்கு எல்லாம் பயனளிக்கும் வகையில் இன்றைய பதிவில் தலையில் இருந்து கொத்து கொத்தாக முடி கொட்டும் பிரச்சனையை சரி செய்வதற்கான ஒரு அருமையான ஹேர் பேக்கினை எப்படி தயாரிப்பது என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
முடி உதிர்வு காரணம்:
நம்முடைய தலையில் முடி உதிர்வுக்கு ஒழுங்கற்ற உணவு முறை, எண்ணெய் பயன்படுத்தும் முறை, ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம், உடல் பருமன், உடல் வெப்பம் மற்றும் உடலில் ஏற்படும் மற்ற பிரச்சனைகள் ஆகியவற்றின் காரணமாக தான் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.இத்தகைய முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்வதற்கு ஒரு ஹேர் பேக் தயார் செய்து அதனை எப்படி அப்ளை செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
- சின்ன வெங்காயம்- 50 கிராம்
- விளக்கெண்ணெய்- 2 ஸ்பூன்
- ஆளி விதை- 5 ஸ்பூன்
இதையும் படியுங்கள்⇒ உங்கள் சருமத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய இதை மட்டும் செய்யும் போதும்..
ஹேர் பேக் செய்வது எப்படி..?
ஸ்டேப்- 1
சின்ன வெங்காயத்தில் வைட்டமின் B6, வைட்டமின் C, வைட்டமின் D, மெக்னீசியம், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. அதனால் 50 கிராம் சின்ன வெங்காயத்தை எடுத்துக்கொண்டு அதனை மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
ஸ்டேப்- 2
இப்போது அரைத்து வைத்துள்ள ஹேர் பேக்குடன் விளக்கெண்ணெய்யினை சேர்த்து நன்றாக கலந்து கொண்டு பின்பு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தி கொண்டு சிறிது நேரம் ஆறவைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
அடுத்து அடுப்பில் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் எடுத்து வைத்துள்ள ஆளி விதையினை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கொள்ளுங்கள். அதன் பின்பு அந்த ஆளிவிதை ஜெல்லினை வடிகட்டி வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
கடைசியாக ஆளி விதை ஜெல்லுடன் ஆற வைத்துள்ள சின்ன வெங்காயம் ஹேர் பேக்கினையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சின்ன வெங்காயம் ஹேர் பேக் தயார்.
இதையும் படியுங்கள்⇒ ட்ரை ஸ்கின் உள்ளவர்கள் முகத்திற்கு இதை மட்டும் பயன்படுத்தி பாருங்க.. ட்ரை ஸ்கின் சாஃப்டாக மாறிவிடும்..
ஹேர் பேக் அப்ளை செய்தல்:
இப்போது நீங்கள் தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை உங்களுடைய முடியின் இரண்டு பகுதிகளிலும் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.
அதன் பின்பு வழக்கம் போல தலை குளித்து விடுங்கள். இவ்வாறு நீங்கள் வாரம் 1 முறை அப்ளை செய்தால் போதும் விரைவில் தலையில் முடி உதிர்வு பிரச்சனை குறைந்து போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு முடி வளரும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |