Can Aloe Vera Remove Dark Spots And Pimples
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதிலும் பெண்கள் கொஞ்சம் அதிகமாகவே கொடுப்பார்கள். முகத்தில் பருக்கள் ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்காக மருந்துகள் அப்ளை செய்வோம். இதனால் பருக்கள் மறைந்து கரும்புள்ளியாக மாறும், அதன் பிறகு பள்ளமாக மாறிவிடும். அதனால் சரும பிரச்சனைக்கு இயற்கையான முறையை கையாண்டால் நிரந்தரமான தீர்வை காணலாம். இத பதிவில் முகப்பரு, கரும்புள்ளி, முகத்தில் உள்ள பள்ளம் அனைத்தும் மறைவதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
How To Use Aloe Vera For Pimples And Dark Spots in Tamil:
கற்றாழை:
கற்றாழையில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. கற்றாழையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்க பயன்படுகிறது. மேலும் சருமத்தை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது.கற்றாழையை எடுத்து தோல் பகுதியை சீவி உள்பகுதியில் இருக்கும், ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த ஜெல்லை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது போல் செய்வதினால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளி மறைய ஆரம்பித்து விடும். இந்த குறிப்பை தினமும் செய்து வர வேண்டும்.
உங்கள் சருமத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய இதை மட்டும் செய்யும் போதும்..!
கற்றாழை குளிர்ச்சியாக இருப்பதால் உங்களுக்கு சளி, ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனை போன்றவை இருந்தால் கற்றாழை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர்:
ஒரு பவுலில் கற்றாழை ஜெல் சிறிதளவு, ரோஸ் வாட்டர் சிறிதளவு, சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். இந்த பேக் பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதை காணலாம்.
அதன் பிறகு ஐஸ்கியூப் எடுத்து ஒரு மெல்லிய துணியில் உள்பகுதியில் வைத்து முகத்தில் மசாஜ் ஒரு 20 நிமிடத்திற்கு செய்யவும். இந்த பேக் பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைந்து விடும்.
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாக தெரிய பாலுடன் இதை கலந்து தடவுங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |