How to Use Coconut Milk Pack for White Hair Tamil
இன்றைய காலத்தில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முடி மீது அதிக அக்கறை இருக்கும். பெண்களுக்கு சொல்லவே வேணாம் இடுப்பு கீழே வரைக்கும் முடி இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். வயதாகி வெள்ளை முடி அதனை பெரிதும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் சத்து குறைபாட்டால் வெள்ளை முடி ஏற்படும் என்று அதனை விட்டு விடுவார்கள். ஆனால் சிறு வயதிலையே வெள்ளை முடி வந்தால் அய்யோயோ இப்போவே வெள்ளை முடி வந்து விட்டதே என்று மன அழுத்த ஏற்படும். இந்த வெள்ளை முடியை எப்படி மறைப்பது என்று ஆலோசித்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க வெள்ளை முடிக்கு தேங்காய் பால் பேக்கை பற்றி தெரிந்து கொள்வோம்.
Coconut Milk Pack for White Hair Incredients:
✔ தேங்காய் பால்- 1/4 கப்
✔ நெல்லிக்காய் ஜூஸ் – 2 தேக்கரண்டி
✔ வெந்தய பொடி- 1 தேக்கரண்டி
✔ எலுமிச்சை சாறு- 1 தேக்கரண்டி
தேங்காய் பால் வெள்ளை முடி பேக்:
தேங்காய் பால்:
முதலில் ஒரு தேங்காய் மூடி எடுத்து அதனை திருவி கொள்ளவேண்டும். பின் இதனை மிக்சி ஜாரில் லேசாக தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். ரோபோ நேவாக அரைக்க வேண்டாம், லேசாக அரைபட்டதும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து வெந்நீரை பயன்படுத்தி பாலாக பிழிந்து கொள்ள வேண்டும்.
பொருட்களை கலப்பது:
ஒரு கிண்ணம் எடுத்து கொள்ள வேண்டும், அதில் 1/4 கப் தேங்காய் பால், 2 தேக்கரண்டி நெல்லிக்காய் சாறு, 1தேக்கரண்டி வெந்தய பொடி 1 தேக்கரண்டி, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு போன்றவற்றை கலந்து கொள்ள வேண்டும்.
அப்ளை செய்யும் முறை:
கலந்த பேக்கை தலை முடி வேர் முதல் நுனி வரை அப்ளை செய்து கொள்ள வேண்டும். இதனை 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை தலையில் எல்லாம் இடமும் அப்ளை ஆகும் வரை மசாஜ் செய்யுங்கள். அப்ளை செய்த பிறகு 30 முதல் 40 நிமிடங்கள் தலையில் ஊற விட வேண்டும். அதன் பிறகு தலையை வெதுவெதுப்பான நீரில் சல்பேட் இல்லாத ஷாம்புவை பயனப்டுத்தி தலையை தேய்த்து அலச வேண்டும். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை என்று வெள்ளை முடி கருப்பாக மாறும் வரை பயன்படுத்த வேண்டும்.
அரை மணி நேரத்தில் வெள்ளை முடி இயற்கையாக கருமையாக மாற்றும் ஹேர் டை
தேங்காய் பால் முடியின் நன்மைகள்:
✔ தேங்காய் பாலில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.இந்த சத்துக்களானது நமக்கு மெலனின் உற்பத்தியை அதிகப்படுத்தி வெள்ளை வராமல் வருவதை தடுக்கிறது.
✔ தேங்காய் பால் முடிக்கு தேவையான வைட்டமின்கள் இருக்கிறது. இதில் ஆக்ஸிஜனேற்ற பானுபுகள் இருப்பதால் வெள்ளை முடியை கருப்பாக பயன்படுத்துவதற்கு உதவுகிறது.
✔ வறண்ட முடியை மென்மையாக மாற்றுவதற்கு தேங்காய் பால் உதவுகிறது. முடி அடர்த்தியை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. மெலனின் உற்பத்தியை அதிகப்படுத்தி வெள்ளை முடி வராமல் தடுக்கிறது.
தேங்காய் பால் பயன்படுத்தி ரிசல்ட்டை பெறுவதற்கு கூடுதல் குறிப்பு:
☑ கடைகளில்வெள்ளை முடியை மறைப்பதற்கான டையை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
☑ உங்களது உணவு முறையில் இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் ஒமேகா-3 போன்ற உணவுகள் உள்ளதாக சாப்பிட வேண்டும்.
☑ உங்களது லைப் ஸ்டைலில் தியானம் அல்லது உடற்பயிற்சியை செய்யுங்கள்.
☑ கெமிக்கல் நிறைந்த ஷாம்புகள் மற்றும் எண்ணெய்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |