நீளமான முடியினை பெறுவதற்கு தேங்காய் எண்ணையை இப்படி பயன்படுத்தினாலே போதும்..!

Advertisement

How to Use Coconut Oil for Hair Growth and Thickness

நம்மில் பெரும்பாலான வீடுகளில் தலைமுடிக்கு தேங்காய் எண்ணெயினை தான் பயன்படுத்தி வருகின்றோம். இவ்வாறு நாம் வெறும் தேங்காய் எண்ணெயினை மட்டும் பயன்படுத்தினால் எப்படி முடி நீளமாக வளரும் என்பது நம் அனைவருக்கும் அடிக்கடி தோன்றிய ஒன்றாக இருக்கும். அதனால் தான் இப்படிப்பட்ட உங்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக இன்றைய அழகுக்குறிப்பு பதிவில் முடியினை நீளமாக வளர வைப்பதற்கான ஒரு அற்புதமான எண்ணெயினை தயாரித்து பயன்படுத்தும் முறையினை பற்றி பார்க்கப்போகிறோம். ஆகவே பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறுங்கள் நண்பர்களே..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முடி நீளமாக வளர:

முதலில் கீழே பட்டியலிட்டு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்து வைத்து விடுங்கள்.

  1. தேங்காய் எண்ணெய்- 100 மில்லி
  2. விளக்கெண்ணெய்- 25 மில்லி 
  3. வெந்தயம்- 3 ஸ்பூன் 
  4. கறிவேப்பிலை- 1 கைப்பிடி அளவு 
  5. செம்பருத்தி பூ-

Life Style👇👇 1 ரூபாய் செலவு இல்லாமல் முடியை ஸ்ட்ரைட்னிங் செய்யலாம் வாங்க

எண்ணெய் தயாரிப்பு:

கறிவேப்பிலை முடி

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் எடுத்துவைத்துள்ள தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணையினை சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

பின்பு எண்ணெய் கொத்தித்த பிறகு எடுத்துவைத்துள்ள செம்பருத்தி பூ, கறிவேப்பிலை மற்றும் வெந்தயம் இந்த மூன்றினையும் சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள்.

5 நிமிடம் கழித்து அடுப்பில் உள்ள எண்ணெயினை இறக்கி ஆற வைய்யுங்கள். அடுத்து ஒரு மூடி போட்ட கண்ணாடி பாட்டிலில் இந்த எண்ணெயில் இருக்கும் கறிவேப்பிலை மற்றும் செம்பருத்தி பூவினை நீக்கி விட்டு ஊற்றி வைத்து விடுங்கள். 

அவ்வளவு தாங்க இயற்கையான முறையில் தலை முடிக்கு எண்ணெய் தயார்.

பயன்படுத்தும் முறை:

தயார் செய்து வைத்துள்ள எண்ணெயினை முடிக்கு தினம் தோறும் தடவி வாருங்கள். அதேபோல் வாரம் 1 முறை இந்த எண்ணெயினை  தலையில் தேய்த்து குளித்து வந்தால் போதும் நீங்கள் ஆசைப்பட்டதை விட முடி நீளமாகவும், கருப்பாகவும் வளர்ந்து இருக்கும்.

Life Style👇👇எவ்வளவு முடி என்று வாயை பிளக்க வேண்டுமென்றால் இந்த எண்ணெயை தடவுங்க..

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement