How to Use Coconut Oil For Hair Growth in Tamil
முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றோம். ஆனால் பலருக்கும் முடி உதிர்வு, பொடுகு பிரச்சனை ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்காக கடையில் விற்கும் பொருட்களை பயன்படுத்தி சரி செய்கின்றனர். ஆனால் கெமிக்கல் சேர்க்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தி சரி செய்தாலும் நாளடைவில் உங்களின் முடியிலும், ஆரோக்கியத்திலும் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான முறையில் முடி வளர செய்வது சிறந்தது. அதனால் இந்த வீட்டில் உள்ள பொருள் அதவாது தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி முடியை எப்படி வளர செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தேங்காய் எண்ணெய் மற்றும் கருவேப்பிலை:
கறிவேப்பிலையில் பீட்டா கரோட்டின் அதிகமாக இருப்பதால் முடி வளர்ச்சியைத் தூண்டும். அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த, கருவேப்பிலை முடி உதிர்வதை தடுக்கும்.ஒரு கைப்பிடி கருவேப்பிலையை எடுத்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைத்து எடுக்க வேண்டும். அடுப்பில் கடாய் வைத்து 100 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெய், அதனுடன் கருவேப்பிலையை சேர்த்து கொதிக்க விடவும். இந்த எண்ணெயை ஆற விடவும். ஆறியதும் எண்ணெயை தலையில் சேர்த்து மசாஜ் செய்து 1 மணி நேரம் கழித்து குளிக்கவும்.
முன் நெற்றி ஏறிக்கொண்டே போகிறதா.! அப்போ விளக்கெண்ணெயில் இந்த பொருட்களை சேர்த்து தடவினால் போதும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் கலோஞ்சி விதைகள்:
வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி நிறைந்ததாக அறியப்படும் கலோஞ்சி விதைகளின் அவை மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு பொட்டாசியம் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்களிலும் நிறைந்துள்ளன. அமிலங்கள் .ஒரு தேக்கரண்டி கலோஞ்சி விதைகளை அரைத்து எடுத்து கொள்ளவும். அரைத்த கலோஞ்சி விதைகளை தேங்காய் எண்ணெயில் சேர்க்கவும். தேங்காய் எண்ணெயில் 2 நாட்கள் அல்லது 3 நாட்கள் அப்படியே விடவும். இந்த எண்ணெயை பயன்படுத்தும் போது லேசாக சூடுபடுத்தி தலையில் மசாஜ் செய்யவும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் செம்பருத்தி பூ:
செம்பருத்தி பூ முடி உதிர்வதைத் தடுக்கின்றன மற்றும் முடி நரைப்பதை தாமதப்படுத்துகின்றன. வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளதால் முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.ஒரு கைப்பிடி செம்பருத்திப் பூக்களை எடுத்து, குளிர்ந்த நீரில் நன்கு கழுவி, வெயிலில் உலர விடவும். காய்ந்ததும், சிறிதளவு தேங்காய் எண்ணெயைச் சூடுபடுத்தி அதில் செம்பருத்திப் பூவின் இதழ்களை சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயிலே வைத்து சூடுபடுத்தவும். பிறகு எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டில் ஸ்டோர் செய்யவும். இந்த எண்ணெயை தலையில் தடவி ஒரு மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |