How to Use Kalonji for Hair Growth in Tamil | கருஞ்சீரகம் தலைக்கு எப்படி பயன்படுத்துவது.?
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முடியின் ஆரோக்கியத்திற்கு கருஞ்சீரகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் (How to Use Kalonji for Hair Growth in tamil) என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். முடி பராமரிப்பை பொறுத்தவரை கருஞ்சீரகம் நல்ல பொருள். கருஞ்சீரகத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது முடி சம்மந்தமான பொடுகு,அரிப்பு அழுக்கு போன்றவற்றை நீக்கி முடியினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
கருஞ்சீரகம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவினை பூர்விகமாக கொண்டது. இது 20 முதல் 30 செ.மீ வரை வளரக்கூடியது. இதன் விதைகள் அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது சமையலிலும் நறுமண பொருட்களாகவும் பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல், முடியின் வளர்ச்சிக்கும் இதனை பயன்படுத்தலாம் என்று ஆய்வுகள் கூறுகிறது. எனவே, முடியின் ஆரோக்கியத்திற்கு கருஞ்சீரகத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.
How to Use karunjeeragam for Hair Growth in Tamil:

பயன்படுத்தும் முறை -1
ஒரு கிண்ணத்தில் கருஞ்சீரக பொடியை எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் தயிரினை சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் கலந்து எடுத்துக்கொள்ளுங்கள். இந்த பேஸ்டினை உச்சந்தலை முதல் முடியின் நுனிப்பகுதி வரை அப்ளை செய்ய வேண்டும். அப்ளை செய்து அரை மணிநேரம் வரை அப்படியே வைத்திருந்து அதன் பிறகு, தலையை அலசுங்கள். இவ்வாறு மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை செய்து வந்தால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.பயன்படுத்தும் முறை -2
ஒரு கிண்ணத்தில் கருஞ்சீரக பொடி அல்லது கருஞ்சீரக எண்ணெய்யை எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலந்து தலைமுடியில் தேய்த்து 30 நிமிடங்கள் வைத்து அதன் பிறகு தலையை அலசுங்கள்.
கருஞ்சீரகம் யார் யார் சாப்பிட கூடாது
பயன்படுத்தும் முறை -2
ஒரு கிண்ணத்தில் கருஞ்சீரக பொடி மற்றும் எலுமிச்சை சாற்றினை எடுத்து கொள்ளுங்கள். இவை இரண்டினையும் நன்றாக கலந்து முடியின் வேர்ப்பகுதி முதல் நுனிப்பகுதி வரை அப்ளை செய்யுங்கள். 20 முதல் 30 நிமிடங்கள் வரை அப்படியே வைத்துவிட்டு அதன் பிறகு தலையை அலசுங்கள்.
பயன்படுத்தும் முறை -5

2 டேபிள் ஸ்பூன் கலோஞ்சி எண்ணெயை 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிருடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை தலைமுடியில் தேய்த்து 30 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து அதன் பிறகு, தலையை அலசுங்கள்.
பயன்படுத்தும் முறை -5
கருஞ்சீரக எண்ணெய்யை தேங்காய் எண்ணெயுடன் கலந்து, தலை குளிப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக தலை முடியின் வேர்ப்பகுதி முதல் முடியின் நுனிப்பகுதி வரை அப்ளை செய்யுங்கள். அதன் பிறகு 2 மணிநேரம் கழித்து குளியுங்கள்.
மேலே கூறியுள்ள முறைகளில், உங்களுக்கு விருப்பமான முறைகளை தேர்ந்தெடுத்து மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை செய்து வந்தால் முடி நன்றாக வளரும். முடி உதிர்தல் நீங்கும். முடி நன்றாக கருகருவென்று வளரும். எனவே, உங்களுக்கு இந்த மாதிரியான எந்த முடி பிரச்சனை இருந்தாலும், இந்த முறையில் கருஞ்சீரகத்தை பயன்படுத்தி வந்தீர்கள் என்றால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
கருஞ்சீரகம் ஆயிலிலில் இவ்வளவு இருக்கா.! இத்தனை நாளா தெரியாம போச்சே..
| இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |














